UP
Home > Events >
Nammavar at Papparapatti
பாப்பாரப்பட்டி / Papparapatti

பாப்பாரப்பட்டியில் நம்மவர்

Nammavar at Papparapatti

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், தன் ‘மக்களுடனான பயணத்தில்’ இன்று பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர், “நான் சினிமாவில் இருந்த பொழுதே எங்களது நற்பணி இயக்கம் பாப்பாரப்பட்டியில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தது. இப்பொழுது நான் எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து விட்டேன், எங்கள் நடவடிக்கைகளில் அது உங்களுக்குப் புரியும்.

எங்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு தருமபுரி ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு கமல் பாலா மற்றும் திரு ராகவன், திரு ரகு ஆகியோர் உங்களின் குறைகளைக் கேட்க இங்கு உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் உங்கள் தொண்டர்கள், தலைவர்கள் இல்லை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் என் முன்னே நிற்கிறார்கள்.

திரு சுப்ரமணிய சிவா அவர்களின் ஊரில் பாரதமாதா கோவில் கட்டப்பட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. நீங்கள் சரியான முடிவெடுத்தால், ஒவ்வொரு வீடும் பாரதமாதா கோவிலாக மாறும்.

பள்ளி கல்லூரிகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால், பெண்கள் கல்வி கற்பதில்லை. அதை மாற்றவேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan met the party members and general public of Nallampalli as a part of his ‘MakkalUdanaanaPayanam’ on this day.

While addressing the gathering, he said, “When cinema was my life, our narpaniiyyakam had built a school at Paaparapatti, so you can imagine what we will do for you having decided to dedicate the rest of my life to you.The rest of my life is with you, you will see that in my actions.

Dharmapuri Rajasekar, Kamal Bala, Raghavan, Raghu and others from our party are here to learn about your perils. It is their duty. Contact them, they are your workers not your leaders.The leaders of MNM are gathered here in front of me.

This is the land of Subramanyasiva, a barathamatha temple is long overdue, but if you make the right decision, each house can become a barathamatha temple.

The literacy rate among women is low here because schools and colleges lack proper sanitation facilities. This must be changed. You have the power to do it.