UP
Home > Events >
Children’s Day Celebrations
சென்னை / Chennai

குழந்தைகள் தினக்கொண்டாட்டம்

Children’s Day Celebrations

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் குழந்தைகள் தினத்தை, “லிட்டில் ஃபிளவர்ஸ் கான்வெண்ட்டில்” மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் இன்று கொண்டாடினார். 500க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி குழந்தைகளுடன் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரு கமல் ஹாசனின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை  தெரிவிக்கும் வகையாக சிறப்பு பாடல் ஒன்றைப் பாடினர்.

 

சக்தி என்ற, கண் பார்வையற்ற மாணவி, ‘ப்ரெயில் முறையில்’ புத்தகங்கள் அச்சிட உதவும் சாதனங்களை பெற திரு.கமல் ஹாசன் அவர்களின் உதவியை கோரினார்.

 

குழந்தைகளின் கலை நிகழ்சிகளுக்குப் பின், அவர், குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

 

குழந்தைகளிடத்தில் பேசிய அவர், “இங்கிருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் தன்னம்பிக்கை, அனைவருக்கும் இருந்தால் நமது நாடு இன்னும் பன்மடங்கு முன்னேறும். “நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன். இங்கு தான் நான் ப்ரைல் மற்றும் சைகை மொழியையும் கற்றேன்.

 

என் பாட்டை நீங்கள் பாடியது எனக்கு உத்வேகம் அளித்தது. உங்களைப் போலவே நான் செல்லும் இடமெல்லாம், ‘உன்னால் முடியும் தம்பி’ என்கிறார்கள்.

 

செல்வி சக்தி ‘ப்ரெயில் முறையில் புத்தகங்கள் அச்சடிக்கும் சாதனங்களைக் கோரினார், அவை மும்பையில் கிடைக்கும் என்று அறிவேன், அவை உங்களை கட்டாயம் வந்தடையும்.

 

குழந்தைகள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடினார்கள். அவர்கள் நிறைய நாளையை சந்திக்கப் போகிறவர்கள், அவர்களின் வாழ்த்துக்களால் என் வாழ்நாள் அதிகரிக்கும் என நம்புகிறேன். நன்றி.”

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு காந்தி கண்ணதாசன், திரு சி.கே.குமாரவேல், திரு மூர்த்தி, திரு ராஜநாராயணன், திரு சிநேகன் மற்றும் திருமதி ஸ்ரீப்ரியா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

MNM party President Mr Kamal Haasan celebrated children’s day with differently abled children at the Little Flower Convent. More than 500 differently abled students participated in the Children’s Day Celebrations today. Cultural performances of the children were organized. The students wished Mr Kamal Haasan for his birthday by singing a special song for him.

Shakthi, a visually impaired student, requested Mr Kamal Haasan’s help in procuring a computer and printer that enables them to print books in braille.

Following the cultural performances, Mr Kamal Haasan distributed sweets and fruits to the children and interacted with them.

While interacting with the kids, he said, “I am an ex-student of this school, I learnt Braille and sign language here. Your rendition of my song gives me great amount of encouragement. Just like you, people of Thamizh Nadu are saying ‘unnal mudiyum thambi’ everywhere I go.

Selvi Shakthi has requested for certain equipments, I understand that they have to be procured from Mumbai, I will ensure it reaches you.

They sang a song expressing their wishes for my birthday. They are the future. They will witness more tomorrows than me, I’m sure their wishes will increase my lifespan as well. Thank you.”

Makkal Needhi Maiam State Executive Committee members Mr Gandhi Kannadhasan, Mr. Johnson, Mr C.K.Kumaravel, Mr Moorthy, Mr Rajanarayanan, Mr Snehan and Mrs Sripriya participated in the event.