UP
Home > Events >
Cyclone Gaja relief activity
புதுகோட்டை, தஞ்சை மாவட்டம் / Pudukottai, Tanjore districts

கஜா புயல் நிவாரணப் பணிகள்

Cyclone Gaja relief activity

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணப் பணிகளை இன்று கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கிவைத்தார்.

அக்கச்சிபட்டி, பந்தூவக்கோட்டை, ஊரணிபுரம், கரம்பயம், பெரியகுமுளை, பாப்பாநாடு, சோழகன் குடிகாடு, ஏனாதி, முத்துப்பேட்டை, நீர்முலை ஆகிய இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, நிவாரண உதவிகள் அளித்தார்.

தென்னை விவசாயிகளுடன் உரையாடி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைப் பற்றி கேட்டறிந்தார். அரசு தரப்பிலிருந்து உதவிகள் எதுவும் தங்களை வந்தடையவில்லை என்று அவர்கள் கூறியதை கேட்ட அவர் அதிர்ச்சியடைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் மட்டுமே அவர்களுக்கு உதவியதாக மக்கள் கூறினர்.

தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி அவர்களுக்குத் தொடர்ந்து துணை நிற்கும் என்று உறுதியளித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத்தலைவர் திரு டாக்டர் மகேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் அவர்கள் மற்றும் கட்சி செயற்குழு உறுப்பினர் திரு. மௌரியா அவர்கள் ஆகியோர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan began the phase two of Cyclone Gaja relief activities of Makkal Needhi Maiam, on this day at Gandharvakottai, Pudukottai district.

He visited Akkachipatti, Bandhuvakottai, Uranipuram, Karambayam, Periyakumulai, Pappanadu, Chozhagan Kudikadu, Enathi, Muthupettai, Neermulai villages, interacted with the people and provided relief materials to them.

He interacted with the Coconut plantation farmers about the losses they have faced. He was taken aback when they told him that no Government official has visited them so far. They conveyed that only the party cadre of MNM and NGOs have helped them so far.

He assured them that Makkal Needhi Maiam will stand by them and continue to support them. MNM party Vice President Dr. R.Mahendran and General Secretary Mr. A.Arunachalam and State Executive committee member Mr Maurya was also present during the relief activity.