UP
DONATE NOW
Home > Events >
Cyclone Gaja relief activity
புதுகோட்டை, தஞ்சை மாவட்டம் / Nagapattinam, Pudukottai districts

கஜா புயல் நிவாரணப் பணிகள்

Cyclone Gaja relief activity

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் கஜா புயல் நிவாரணப் பணிகளை இரண்டாவது நாளாக இன்று அக்கரைபேட்டையில் இருந்து துவங்கினார்.

அக்கரைபேட்டை, தோப்புத்துறை, ஏரிபுறக்கரை, மகிழன்கோட்டை, மல்லிப்பட்டினம், அம்பேத்கர் நகர், ரெண்டாம்புலிக்காடு, பள்ளத்தூர், பரமன் நகர் மற்றும் வடகாடு ஆகிய இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களின் இழப்பீட்டை மதிப்பு செய்து உடன் நிவாரண உதவிகளையும் அளித்தார்.

தென்னை விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைப் பற்றி கேட்டறிந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி அவர்களுக்குத் தொடர்ந்து துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத்தலைவர் திரு டாக்டர் மகேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் அவர்கள் மற்றும் கட்சி செயற்குழு உறுப்பினர் திரு மௌரியா அவர்கள் ஆகியோர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan began the day two relief activities of Cyclone Gaja by Makkal Needhi Maiam, on this day at Akkaraipettai.

He visited Akkaraipettai, Thopputhurai, Eripurakarai, Magizhankottai, Mallipattinam, Ambedkar Nagar, Rendampulikadu, Pallathur, Paraman Nagar and Vadakadu interacted with the people, understood the extent of damage and provided relief materials to them.

He met the Coconut Plantation farmers and the fishermen of the affected regions and understood the extent of their loss. He assured them that Makkal Needhi Maiam will stand by them and continue to support them.

MNM party Vice President Dr. R.Mahendran and General Secretary Mr. A.Arunachalam and State Executive committee member Mr Maurya was also present during the relief activity.