UP
Home > Events >
MNM Zonal in-charges and district in-charges meeting
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டலம் மற்றும் மாவட்டப்பொறுப்பாளர்கள் கூட்டம்

MNM Zonal in-charges and district in-charges meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டலம் மற்றும் மாவட்டப்பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னை பாலவாக்கம் கமர் ஆர்கேட்டில் (15/12/2018) அன்று நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு கட்சியின் துணைத்தலைவர் டாக்டர்.R.மகேந்திரன் அவர்கள் தலைமையேற்று நடத்தி பொறுப்பாளர்களை கட்சியின் வேகமான வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடும்படி கேட்டுக்கொண்டார். அத்துடன் தொகுதி பகுதி பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விவரித்தார். முன்னதாக கட்சியின் பொருளாளர் திரு.சுகா அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி விளக்கி பேசினார். அத்துடன் கஜா புயலினால், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் போது களத்தில் இறங்கி பாடுபட்ட நிவாரண உதவிகள் வழங்கிய கட்சியினரை பாராட்டினார். பின்னர் கட்சியின் கட்டமைப்பு பற்றி செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சி கட்டமைப்பு பொறுப்பாளர் திரு. சௌரிராஜன் அவர்கள் விளக்கினார்.

 

கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள். திரு.காந்தி கண்ணதாசன், திருமதி. கமீலா நாசர், திரு. மௌர்யா, திரு. ரங்கராஜன், திரு ராஜநாராயணன், திரு. ராஜசேகர், திரு.சினேகன், திருமதி. ஶ்ரீப்ரியா, திரு.தங்கவேலு மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Zonal in-charges and district in-charges meeting of Makkal Needhi Maiam party was conducted today (15.12.2018 - Saturday) at Kamar Arcade, Palavakkam, Chennai.

 

Party Vice President Dr. R. Mahendran presided over the meeting. He advised the district in-charges to work towards the swift progress of the party. He also spoke about the roles and responsibilities of the assembly constituency and divisional in-charges. Party Treasurer Mr Suka delivered the welcome address. Party General Secretary Mr. A. Arunachalam spoke about the way forward of the party. He appreciated the efforts of the district in-charges who were instrumental during Makkal Needhi Maiam party's Cyclone Gaja relief and rehabilitation measures. Following that, State Executive Committee member and the Coordinator for party structuring and membership enrolment committee Mr. Sowri Rajan explained in detail about deepening the party structure of Makkal Needhi Maiam.

 

State Executive Committee members of Makkal Needhi Maiam party Mr Gandhi Kannadhasan, Ms.Kameela Nasser, Mr.Maurya, Mr.Rangarajan, Mr.Rajanarayanan, Mr. Rajasekar, Mr. Snehan, Ms. Sripriya and Mr. Thangavelu participated in the meeting. District in-charges from all over Tamil Nadu were in attendance.