UP
Home > Events >
Nammavar inaugurates Ponggu Thamizh 2019
சென்னை / Chennai

பொங்கு தமிழ் 2019 கலைத்திருவிழாவை நம்மவர் தொடங்கிவைத்தார்

Nammavar inaugurates Ponggu Thamizh 2019

பொங்கு தமிழ் 2019 கலைத்திருவிழா மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இன்று தொடங்கிவைத்தார்.

 

விழாவில் அவர், “தமிழையும், தமிழ் பாரம்பரியத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழர் என்பது தகுதி அல்ல, விலாசம். நான் தமிழன் என்பதை மட்டுமே தகுதியாக நினைத்துவிடக்கூடாது. அத்தகுதிக்கு வேண்டிய எல்லா பயிற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.



எத்தனையோ ஏழைகள் கலைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒற்றையடி பாதையாவது போட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலம் வரும். நாளை நமதாகும் என்ற நம்பிக்கையில் இன்று பொங்குவது போன்று என்றும் பொங்கட்டும் தமிழ்.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan inaugurated ‘Ponggu Thamizh 2019 cultural festival and international exhibition’ today.

 

While addressing the gathering he said, “Working towards the growth of Thamizh language and Thamizh Culture is the duty of every Thamizhian. Being a Thamizhian is not qualification, it is our identity. Being born in Thamizh Nadu doesn’t make you a Thamizhian, one has to groom himself to identify as a Thamizhian.

 

Many under privileged people have the hopes of becoming an artist. My dream is to ensure something is done to help them achieve their goals. My dream will come true one day. May Thamizh continue to grow forever as it does today with the hope that tomorrow is ours.”