UP
Home > Events >
Central Governing Body and State Executive Committee meeting
சென்னை / Chennai

நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்

Central Governing Body and State Executive Committee meeting

இன்று 05/01/2019 (சனிக்கிழமை) மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரவிருக்கின்ற பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடிவு செய்திருப்பதால், கட்சியின் மாவட்ட, தொகுதி, மற்றும் பகுதி பொறுப்பாளர்களின் தேர்தல் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண விநியோகம் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவினை,  தலைவர். திரு.கமல் ஹாசன் அவர்கள் எடுத்திட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

Makkal Needhi Maiam party Central Governing Body and State Executive Committee meeting was conducted today.

 

Keeping the fact that Makkal Needhi Maiam has decided to contest in the Parliamentary Elections, the Election agenda of the District In-charges, Assembly Constituency In-charges and Area In-charges were discussed in the meeting.

Facing the elections at Thiruvarur despite the misuse of power and distribution of money in exchange for votes by the ruling and the opposition parties was also discussed.

It was unanimously agreed that the party President Mr Kamal Haasan would decide on contesting the Tiruvarur By-Elections.