UP
DONATE NOW
Home > Events >
West Zone Head Quarters opening
பொள்ளாச்சி / Pollachi

மேற்கு மண்டல தலைமை அலுவலகம் திறப்பு

West Zone Head Quarters opening

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். 19  செப்டம்பர் 2019 அன்று கோயம்புத்தூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்டு, கொடியேற்ற விழாவில் கலந்து கொண்ட பின், அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களிடம் உரையாடிய அவர், “அரசியலை மக்களுக்குச் செய்யும் சேவையாகக் கருதவில்லை, என் கடமையாகக் கருதுகிறேன். இளைஞர்கள் இந்திய மற்றும் தமிழக அரசியலை மாற்றத் தயாராக உள்ளனர், அவர்களுக்கு நாம் வாக்களிக்கக் கற்றுத் தரவேண்டும்.

இந்த அலுவலகம் உங்களின் இரண்டாம் வீடு போன்றது, எங்கள் கட்சி போலவே எங்கள் அலுவலகமும் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும். இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan inaugurated the MNM West Zone Head Quarters at Pollachi on this day. As per the resolutions passed in the Executive Committee Meeting held on 19th September 2019 at Coimbatore, the second Head Quarters of the party was inaugurated on this day.

Makkal Needhi Maiam cut the ribbon and inaugurated the office. After visiting the premises of the second Head Quarters and the flag hoisting, the President addressed the party members. While addressing the thousands of party members gathered there, he said, “I don’t consider politics as a service to the people, it is my duty. I know that youngsters are eager to change the phase of Indian and Thamizh Nadu politics, we must educate them on the voting process.

This office is like a second home to you. It will be open 24/7. Party members must make use of it” he said.