UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam’s Rally To Condemn The Violence Against Women Of Pollachi
பொள்ளாச்சி / Pollachi

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பேரணி

Makkal Needhi Maiam’s Rally To Condemn The Violence Against Women Of Pollachi

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, இன்று (12.03.2019), மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி ஒருங்கிணைப்பாளரான திருமதி. ஸ்ரீப்ரியா அவர்களின் தலைமையில், பொள்ளாச்சி அலுவலகம் முதல் துணை ஆட்சியர் அலுவலகம் வரை 3௦௦ க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், குற்றவாளிகள் மீது விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளியாவதை தடுக்க வேண்டியும்,  அவர்களின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் குறிப்பிட்டிருந்தனர்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமதி. ஸ்ரீப்ரியா அவர்கள், “மக்கள் நீதி மய்யம் கட்சயின் மனுவினை கொடுத்துள்ளோம். ஆவன செய்வதாக கூறியுள்ளார்கள். ஒரு பெண் நீதிபதி இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அந்த பெண்ணின் டேப்பை வெளியிட்டவர்கள் பெயரை கூட சொல்ல நான் விரும்பவில்லை. இது இன்று நேற்று அல்ல, 7 வருடங்களாக நடக்கிறது, இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து தண்டிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்க கேட்டுள்ளோம். தயவுசெய்து அந்த பெண்களை உங்கள் வீட்டு பெண்களாகக் கருதி அவர்கள் அடையாளம்வெளியாவதை தடுங்கள்.” என்றார்.

இப்பேரணியில், கவிஞர் திரு சினேகன் அவர்கள் (மாநில செயற்குழு உறுப்பினர்), திரு தங்கவேலு (மாநில செயற்குழு உறுப்பினர்) மாவட்ட பொறுப்பாளர்கள் திரு சிவா, திரு பிரபு. D, திரு தாமரை கண்ணன், திரு மூகாம்பிகை இரத்தினம், திரு V.சுப்பிரமணியம் மற்றும் சுமார் 300 மேற்பட்ட மகளிர் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

Makkal Needhi Maiam party’s Women and Children Welfare Wing Coordinator Mrs Sripriya, along with more than 300 social activists rallied from Pollachi Makkal Needhi Maiam Head Quarters to Sub Collector’s Office.

 

They met the Sub Collector in person and handed over a petition to take severe action against the culprits, take necessary measures to prevent the identity of the victims being revealed and to punish those who had spread the identities of the victims immediately.

 

While addressing the media after submitting the petition, she said, “We have handed over MNM’s petition, they have assured us that they will do the needful. We have requested a female judge for this case. I’m repulsed to even utter the name of the culprit. We want the police to do a thorough investigation and ensure each and every person behind this crime is punished.  We have also requested a special committee to be set up for the same. Our request to everyone is, consider the victims as your family member and please ensure that their identity isn’t revealed.”

 

State Executive Committee Members Mr Snehan, Mr Thangavelu, district In-Charges Mr Shiva, Mr D. Prabhu, Mr Thamarai Kannan, Ms Mookambikai Rathinam, Mr V.Subramaniam and 300 party members and social activists participated in this rally.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.