UP
DONATE NOW
Home > Events >
Grama Sabhai
சென்னை / Chennai

கிராம சபை

Grama Sabhai

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், இன்று (28.06.2019) வீடியோ கான்ஃபிரன்ஸ் (Video Conference) மூலமாக, ஏற்காடு டவுன் பஞ்சயத்து, பொட்டிபுரம், வெங்கடம்பாளையம், அதிகத்தூர், பாபநாசம், 46 புதூர், கதிராமங்கலம், பாலக்காபாளையம், ஆதனூர் உட்பட 72 க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் காணொளி மூலமாக கலந்து கொண்டார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களிடம் பல்வேறு கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் அதிகாரிகள் வராமலும் தாமதமாக வந்து கிராமசபைக்கூட்டங்களில் கலந்துகொண்டதாக கவலை தெரிவித்தனர்.

 

முறையாக கிராம சபைகள் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிடவும், அவர்கள் கிராமத்திலிருக்கும் பிரச்சனைகளை தீர்க்க தீர்மானங்கள் நிறைவேற்றவும் வலியுறுத்தினார்.

 

அதிகாரிகள் வராததால் நடைபெறாத கிராம சபைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் அளித்து, மற்றொரு நாள் கிராம சபைகளை நடத்த ஆவன செய்யுமாறு தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் கூறினார்.

 

மாதிரி கிராம சபைக் கூட்டத்தை நடத்தி, அதனை பற்றிய விழிப்புணர்வையும், மக்களுக்கு கிராம சபைகளில் அவர்களுக்கு உள்ள அதிகாரத்தை பற்றிய  விழிப்புணர்வையும் ஏற்படுத்திவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட, தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள், களவீரர்கள் மற்றும் உறுப்பினர்கள், இன்று தமிழகமெங்கும் 4000 க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan participated in the Grama Sabhais held at 72 villages, including Yeracaud Town Panchayat, Pottipuram, Venkatampalayam, Adigathur, Paapanasam, 46 Pudhur, Kadhiramangalam, Palakapalayam and Adhanur via video conferencing, today (28.06.2019).

 

He spoke to the people of the villages and while interacting with the people of the villages where the Grama Sabhais happened properly, he asked them to ensure that resolution to conduct Local Body Elections at the earliest and resolutions to solve the issues specific to their villages, get passed. At the villages where Grama Sabhais weren’t conducted because of the absence of Government Officials, he educated about their rights to elevate this issue with the District Collector and ensure that Grama Sabhai is conducted on an alternative date.

 

Makkal Needhi Maiam party believes in the rights of the people that can be exercised in Grama Sabhais  and has been advocating about the same by holding a Mock Grama Sabhai meeting at the party head office on 24th April 2018. Members of the Central Governing Body and State Executive Committee, Zonal In-Charges, District In-Charges, Assembly Constituency In-Charges and divisional In-Charges and other Grass Root workers (Kalaveerargal) of the party participated in more than 4000 Grama Sabhais across Thamizh Nadu today.