UP
DONATE NOW
Home > Events >
Nammavar at the All party meeting for 10% reservation for the EWS
சென்னை / Chennai

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நம்மவர்

Nammavar at the All party meeting for 10% reservation for the EWS

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் டாக்டர் R. மகேந்திரன் அவர்கள், இன்று (08.07.2019) தமிழக அரசால் நடத்தப்பட்ட “பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்” கலந்துகொண்டனர்.

 

அக்கூட்டத்தில் நம்மவரின் உரை:

மனிதர்களிடையே நிலவிய ஏற்ற தாழ்வை சரி செய்வதற்கும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி கிடைப்பதற்கும் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இட ஒதுக்கீடு.

எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரையில், அது நீடித்திட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதற்கு எந்த பழுதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் இருக்கின்றது.

இட ஒதுக்கீடு, “சமூக நீதிக்காகவும் அதன் சமன்பாட்டிற்காகவும்கொண்டு வரப்பட்டதே அன்றி பொருளாதார ஏற்ற தாழ்வினை சரிபடுத்திடுவதற்காக அல்ல, தவிர பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே ஒருமுறை  தமிழகத்தில் முயற்சிக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்பினால் திரும்பப் பெறப்பட்டது.

அந்த வகையில், “பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு” சமூக நீதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை சிதைப்பதாகவும் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் உறுதியாக நம்புகிறது.

எனவே மத்திய அரசின் இந்த திட்டத்தினை தமிழக அரசு நம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்திடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கின்றது.

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan and Vice President Dr. R. Mahendran participated in the all party meeting regarding 10% reservation for the Economically weaker sections of the society organised by the Government today (08.07.2019).

He said, "The Reservation Scheme was introduced to correct the disparities which existed among the different strata of society.

Until the purpose of bringing in reservations is achieved, the reservation scheme must exist. We have the collective responsibility of ensuring that the integrity of the same is protected.

Reservation was bought to negate the highs and lows of societal status, not its economic inequalities. Also, reservation based on economical status is not practically possible.

Reservation based on economic status was a scheme that was introduced in Thamizh Nadu earlier and was withdrawn due to the staunch backlash from our people. So, Makkal Needhi Maiam believes that reservation based on economic status is something that harms the social justice and is disruptive of the true purpose of why we need the reservation scheme.

So Makkal Needhi Maiam's request to the Thamizh Nadu Government is to ensure that this scheme does not get implemented in our state."