UP
DONATE NOW
Home > Events >
Nammavar at the117th Birth Anniversary Celebrations of Kamarajar
திருப்பத்தூர் / Thirupathur

காமராஜரின் 117வது பிறந்தநாள் விழாவில் நம்மவர்

Nammavar at the117th Birth Anniversary Celebrations of Kamarajar

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

 

அப்போது சிறப்புரையாற்றிய அவர், “எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு.காமராஜர்.

 

காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

 

அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது.

 

கல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் திரு. காமராஜர்.ஆனால் இன்று கல்விக்காக தேர்வு எழுதுவதற்கு கூட பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது.

 

இதை இங்கிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து மாற்றிடவேண்டும்.

 

காமராஜர் அவர்களின் கனவு பெருங்கனவு, அக்கனவினை கலையாமல் செயல்படுத்திட அனைத்துக்குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டும் சட்டங்களை திருத்தும் அரசுகளும் செயல்படவேண்டும். எனது குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.

 

காமராஜர் அவர்கள் இந்த அரிய சாதனையை செய்திடுவதற்கு மிக முக்கியமான காரணம் கல்வி மாநில அளவில் கல்வி இருந்ததே மிக முக்கியமான காரணம்.

 

இந்திய நாடு பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாடு நாம் அனைவரும் சேர்ந்து கண்ட கனவு. என்றார்.

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan participated in the 117th Birth Anniversary Celebrations of Kamarajar, conducted by the Kamarajar centenary memorial charity at Thirupathur today and distributed uniforms to Government School students.

Delivering a special address, he said, “Each literate Thamizhian must recount Mr. Kamarajar’s name.

 

I request all the politicians here to ensure that Mr. Kamarajar’s dream is preserved. Kamarajar wanted education to be made available to all, it must not be accessible only to a few.  He said education must reach the student, but now the students travel to the neighbouring states to write exams. Politicians must join hands together and change this situation.

 

Kamarajar had a wonderful dream, we must make it come true by ensuring that education is available to all children. Law makers and Politicians must work towards this. I will too.

 

One of the main reasons why Kamarajar was able to achieve what he wanted to was because education was in the state list.

 

India is a diverse country. To find unity in our diversity is the dream that we all share.”