UP
DONATE NOW
Home > Events >
MNM VP Dr. R. Mahendran's statement reagrding Nammavar's speech on Hindu Extremism
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் ‘ஹிந்து தீவிரவாதம்’ குறித்து பேசியதற்கு கட்சியின் துணைத் டாக்டர் R. மகேந்திரன் அவர்களின் அறிக்கை

MNM VP Dr. R. Mahendran's statement reagrding Nammavar's speech on Hindu Extremism

 

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் ‘ஹிந்து தீவிரவாதம்’ குறித்து பேசியதற்கு கட்சியின் துணைத் டாக்டர் R. மகேந்திரன் அவர்களின் அறிக்கை:

 

 

திரு. கமல் ஹாசன் அவர்கள் அண்மையில் அரவக்குறிச்சியில் ஆற்றிய உரையினை பிரிவினையைத்தூண்டுகின்ற சில அரசியல் அமைப்புக்கள் முற்றிலுமாக திரித்தும் திசைமாற்றியும் விசமப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, அதன் மூலமாக தங்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு வலு ஏற்றிடத்துடிக்கின்ற சில விசமிகள் புரட்டுவாதத்தினை பரப்பி வருகின்றனர்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் அண்மையில் அரவக்குறிச்சியில் தீவிரவாதம்எந்த மதத்தினாலும் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது என்று தெரிவித்திருந்தார்.

 

அவரது உரையில், அவர் ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்தும் ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சமூகமாக இருந்திடவேண்டும் என்கின்ற தன்னுடைய எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.

 

நியாயத்துடனும் நடுநிலையாகவும் செயல்படவேண்டிய ஊடகங்கள் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் அரவக்குறிச்சியில் பேசிய முழு உரையினையும் வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

 

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக, “இந்தியர்” என்கின்ற ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொடர்ந்து வாழ்ந்திடவேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு, மக்களின் பேராதரவோடு நடைபோட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கருத்தினை வலியுறுத்தி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துக் கொண்டே இருக்கும்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தனது இந்த நிலைப்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கும்.மக்கள் நீதி மய்யம் மாட்சிமை பொருந்திய நீதி மன்றங்கள் மீதும் சட்டத்தின் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ளது.

 

 

MNM VP Dr. R. Mahendran's statement reagrding Nammavar's speech on Hindu Extremism:

 

 

Makkal Needhi Maiam believes that at the behest of certain political groups, the speech of our party President Mr. Kamal Haasan at Aravakurichi has been taken completely out of context with a malafide intent and view to promote enmity amongst people and for the ulterior benefits of such groups.

 

In the speech Mr. Kamal Haasan was calling for religious tolerance and co-existence amongst all religious groups and condemned extremism in whichever form and religion. This has been taken absolutely out of context and the speech has been painted as anti -Hindu, with a malafide intent. This has created complete confusion and utmost anxiety amongst many common citizens who are not privy to this larger conspiracy. 

 

In order to ensure a neutral and fair position on this, the media should play the entire speech of Mr. Kamal Haasan so that the speech is understood in the right context by the people and the malicious intent of certain groups is called out.

 

Makkal Needhi Maiam stands for harmony across all sections of people and religions and shall insist on ensuring co-existence amongst all groups.

 

Makkal Needhi Maiam shall continue to voice its opinion in this regard.

Makkal Needhi Maiam holds in high regard the rule of Law and the majesty of our Courts.