UP
DONATE NOW
Home > Events >
Expansion in MNM Party Structure announced
சென்னை / Chennai

கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் அறிவிப்பு

Expansion in MNM Party Structure announced

கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் அறிவிப்பு

 

தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம் கட்சி.

அதன் காரணமாகவே நமது கட்சி, ஆரம்பித்த 14 மாதத்திலேயே நாடாளுமன்றத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர்.

அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021ல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்து, நமது கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன்.

தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன்.

அந்த வகையில் நமது கட்சி, தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடைய பொதுச்செயலாளர் அமைப்புவடக்கு மற்றும் கிழக்கு & தெற்கு மற்றும் மேற்கு என்று இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை சென்றடைய பொதுச்செயலாளர்ஒருங்கிணைப்பு என்கின்ற பதவி உருவாக்கப்படுகிறது.

இத்துடன் பொதுச்செயலாளர்கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர்சார்பு அணிகள், பொதுச்செயலாளர்தலைவர் அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைப்படுத்திடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

இதன் முதற்கட்டமாக கீழ்கண்டவர்கள் பொதுச்செயலாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

பொதுச் செயலாளர்,  ஒருங்கிணைப்பு - திரு. . அருணாச்சாலம் M.A,B.L

பொதுச்செயலாளர், அமைப்பு (வடக்கு & கிழக்கு ) - திரு. A.G மௌர்யா I.P.S ((Rtd)

பொதுச் செயலாளர், அமைப்பு (தெற்கு & மேற்கு) - தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில்.

பொதுச்செயலாளர், கொள்கைப் பரப்பு - திரு. R. ரங்கராஜன் ex-I.A.S

பொதுச் செயலாளர், சார்பு அணிகள் - திருமதி. V. உமா தேவி B.Sc

பொதுச் செயலாளர், தலைவர் அலுவலகம் - திரு.பஷீர் அகமது I.A.S (Rtd)

 

டாக்டர்.R.மகேந்திரன் மற்றும் திரு. A. சந்திரசேகர் ஆகிய இருவரும் தற்பொழுது தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளில், முறையே, கட்சியின் துணைத்தலைவராகவும் பொருளாளராகவும் தொடர்ந்து செயல்படுவார்கள்.

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொதுச்செயலாளர்களும் நமது கட்சியின் நோக்கத்தினை செயல்வடிவாக்கி, தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியினை அமைத்திட பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.” என்று தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் இன்று அறிவித்தார்.

 

 

“The current state of polity in Thamizh Nadu has degenerated to selfishness, lack of dignity and completely deprived of all the rich traditional values embodied in our culture. It is no longer about the welfare of common man. 

Makkal Needhi Maiam party was formed to serve as a party that brings back the lost ethos of Thamizh Nadu polity and strives for the welfare of all sections of people.

Makkal Needhi Maiam contested the recent Elections when it was just 14 months old on the strength of its ideals and what it believes to be its purpose and responsibility. All strata of people gave the party an over whelming response.

I now want to ensure an even bigger success for the party in the 2021 Thamizh Nadu State Assembly Elections and form a Government which shall truly be for the people. To achieve this, the following action plans have been decided:

  • Expand the party structure to an extent where each and every voter of Thamizh Nadu is in direct contact with Makkal Needhi Maiam party functionaries.
  • The party shall now have one Vice President, 6 General Secretaries and 1 Treasurer function under the President.
  • To bolster the party organisation activities and to take the party to every nook and corner of Thamizh Nadu, there shall be two new General Secretaries for Party Organisation, one as General Secretary -Party structure North & East and another as General Secretary-Party structure South & West.
  • To boost the party's electoral prospects in 2021, there shall be one General Secretary Coordination to further strengthen the party at the booth level in all constituencies across Thamizh nadu.

In addition, the party shall also have a General Secretary – Propaganda, General Secretary – Frontals and a General Secretary – President's Office to give a focussed approach to the party in a wholesome manner.

Thamizh Nadu will be divided into 8 Zones for easy and efficient administration. Chennai, Kanchipuram, Salem, Vilupuram, Coimbatore, Trichy, Madurai and Thirunelveli will be the zones. One Zonal In-charge Organisation and one Zonal In-charge Coordination will be appointed for each zone.

The newly appointed Zonal In-charges will be those who hail from that zone.

As a first step in this expansion process, I hereby announce the appointment of the following General Secretaries:

General Secretary, Coordination - Mr. A. Arunachalam, M.A,B.L

General Secretary, Party Structure (North & East) - Mr. A.G Maurya I.P.S (Rtd)

General Secretary, Party Structure (South & West) - Under the direct supervision of the President’s Office

General Secretary, Propaganda - Mr. R. Rangarajan ex-I.A.S

General Secretary, Frontals - Ms. V. Umadevi B.Sc

General Secretary, President’s Office - Mr. Basheer Ahamed I.A.S (Rtd)

 

Dr. R. Mahendran and Mr. A. Chandrasekar will continue to function in their current posts as the Vice President and Treasurer of the party respectively.

I am confident that the newly appointed General Secretaries shall work towards making our vision a reality and contribute towards a better Thamizh Nadu. I wish them all the best in all their endeavours.” Said party President Mr. Kamal Haasan in a press release sent today.