UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party’s Independence Day Celebration
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுதந்திர தின விழா

Makkal Needhi Maiam party’s Independence Day Celebration

இந்தியத் திருநாட்டின் 73 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

 

கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர், (வடக்கு & கிழக்கு) திரு. A.G. மௌர்யா I.P.S (Rtd) அவர்கள், கட்சிக் கொடியேற்றி விழாவினை துவக்கிவைத்தார்.

 

ஏரியா சபை:

 

தமிழக மக்களில் 50% சதவீதம் நகர்புற மக்கள். கிராம மக்களுக்கு கிராம சபை போல நகர மக்களுக்கு அதிகாரமளிக்கும் “ஏரியா சபை கூட்டத்திற்கான சட்ட திருத்தம் 2010 லேயே இயற்றப்பட்டது (Tamil Nadu Municipal Laws (Amendment) Act, 2010 – Act NO 35) ஓவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலுள்ள ஒவ்வொரு வார்டிற்கும் ஒரு வார்ட் சபை அமைத்து, அந்த ஒவ்வொரு வார்டிலும் 5 முதல் 10 ஏரியா சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே அந்த சட்ட திருத்தமாகும். ஆனால் இதுவரை அதற்குரிய விதிமுறைகளை அரசாங்கம் இயற்றாததால், இந்த ஏரியா சபை சட்டதிருத்தம் நடைமுறைபடுத்தப்படாமல் இருக்கிறது. இதனால், நகர்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்தில் பங்கேற்க இயலாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற ஏரியா சபைகள் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக அரசை, ஏரியா சபை சட்டதிருத்தங்களுக்கான விதிமுறைகளை, உடனடியாக இயற்றி, தமிழகத்திலுள்ள 50% சதவீத நகர்புற மக்கள் ஏரியா சபைகள் மூலம் ஜனநாயகத்தில் பங்கெடுக்க வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாதிரி ஏரியா சபை கூட்டத்தினை இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தியது.

 

இதில் கட்சியின் அமைப்பு (வடக்கு & கிழக்கு) பொதுச்செயலாளர் திரு. A.G. மௌர்யா I.P.S (Rtd) அவர்கள், கட்சியின் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் திரு. R. ரங்கராஜன் ex-I.A.S  அவர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்கள், திரு. C.K. குமாரவேல் அவர்கள், கட்சியின் மாவட்ட, தொகுதி, பகுதி பொறுப்பாளர்கள், களவீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னெடுப்பான கிராம சபைக் கூட்டங்களில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தமிழகமெங்கும் கலந்துகொண்டனர். தலைமை அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திரு. A.G. மௌர்யா I.P.S (Rtd) அவர்கள் திரு. R. ரங்கராஜன் ex-I.A.S அவர்கள், திரு. காந்தி கண்ணதாசன் மற்றும் திரு. C.K. குமாரவேல் அவர்கள் கலந்துகொண்டனர்.

 

Makkal Needhi Maiam party celebrated India’s 73rd Independence Day at the Party’s head office in Chennai today.

MNM General Secretary for Party Structure (North & East) Mr. A.G Maurya I.P.S (Rtd) began the celebrations by hoisting the National Flag at the Party head office.

Area Sabhai:

50% of Thamizh Nadu’s population reside in Urban areas. Village people have ‘Grama Sabhai’ to voice out their concerns and exercise their rights. A similar provision has been made for the people residing in Urban areas via ‘Area Sabhai’. Legal provision for the same was made via an amendment in the Tamil Nadu Municipal Laws (Amendment) Act, 2010 – Act NO 35. This amendment required that ‘Ward Sabhais’ be formed in every ward of Corporation and Municipality. It further required 5 to 10 ‘Area Sabhai’ to be formed within each ‘Ward Sabhai’. However, the required rules for the same have not been notified for the last 9 years and hence ‘Area Sabhai’ and ‘Ward Sabhai’ have not been implemented. This is preventing people of Urban areas from being a part of participatory Democracy. It may be noted that‘Area Sabhai’ has been implemented in Kerala, Karnataka and West Bengal.

Makkal Needhi Maiam party demands the Thamizh Nadu Government to prescribe the rules for ‘Area Sabhai’ and ‘Ward Sabhai’ immediately and ensure that 50% of the population of Thamizh Nadu also get to be a part of Participatory Democracy. MNM also enacted a mock ‘Area Sabhai’ today to emphasise its importance.

MNM General Secretary for Party Structure (North & East) Mr. A.G Maurya I.P.S (Rtd), MNM General Secretary for Propaganda Mr. R. Rangarajan ex-I.A.S, MNM State Executive Committee Member Mr. Gandhi Kannadasan and Mr. C.K.Kumaravel, Party District In-charges, other functionaries and members participated in the same.

Makkal Needhi Maiam party’s functionaries and members participated in the Grama Sabhais held all over Thamizh Nadu. Mr. A.G Maurya I.P.S (Rtd), Mr. R. Rangarajan ex-I.A.S, Mr. Gandhi Kannadasan and Mr. C.K.Kumaravel participated in multiple Grama Sabhai meetings via Video Conferencing from the party Head Office.