UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan interacts with the students of Vels University
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர் கமல் ஹாசன் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடினார்

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan interacts with the students of Vels University

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர் கமல் ஹாசன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான உலக மாணவர்கள் நாளன்று (15.10.2019) நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களிடயே உரையாடினார்.

 

மாணவர்களுடன் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் பற்றி உரையாடும் பொழுது அவர், ”நானும் அவரும் (டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்) 3 மணி நேரம் விமானத்தில் பயனம் செய்யும் வாய்ப்பு எதேச்சையாக எனக்கு கிடைத்தது. அப்பொழுது எங்களுக்குள் நடந்த 2 மணி நேர உரையாடல் அவருக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ தெரியாது, ஆனால், எனக்கு என் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தியது என்றால் மிகையாகாது. வள்ளுவனாகட்டும், புத்தனாகட்டும், ஐயா அப்துல் கலாமாகட்டும், சொல்லும் வார்த்தைகளில் ஜாலம் இருக்காது, உடனே பலிச்சென்று நம் உள்ளத்தை தொட்டுவிடாது. அந்த வார்த்தைகளை வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்ந்து பார்க்க பார்க்க, அந்த வார்த்தைகளின் ஆழம் புரியும்.” என்றார்
 

 

“திறன் மேம்பாடு; இது தான் இந்தியா ஈடுபட வேண்டிய அடுத்த சத்தியாகிரக இயக்கமாக இருக்க வேண்டும். கல்வியில் ஒற்றை கலாச்சாரம் (monoculture) இருக்க கூடாது.” ‘தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்’ என்று ஒரு ஆங்கில திரைப்படத்தின் வசனத்தை குறிப்பிட்ட அவர், ஆசிரியர்களும் மாணவர்களும் கற்பித்தல் அல்லது கற்றலோடு நிற்காமல் தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும் பயில வேண்டும் என்று கூறினார்.

 

மாணவர்களை ‘நாளைய தலைவர்கள்’ என்று குறிப்பிட்ட நம்மவர்,  மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார். ”நான் சொல்வது தேர்தல் அரசியல் மட்டும் அல்ல, நான் சொல்வது, இந்த நாட்டை டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கண்ட கனவு போல், இத்தனை வருடத்துக்குள் முன்னே கொண்டு செல்ல வேண்டும் என்பது நமது கணவாக இருக்க வேண்டும்” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan participated in an event conducted for Dr. A. P. J. Abdul Kalam at Vels University on the latter’s birthday (15.10.2019), also celebrated as ‘World Students’ Day’, where he delivered a speech and also interacted with the students.

 

While addressing the gathering about Dr. A. P. J. Abdul Kalam, he said, “I was able to have a brief conversation with Dr. Abdul Kalam on a chance encounter with him in a flight. I do not know what change the 2-hour conversation brought to him but, it definitely brought a huge change in my life. The words of great people like Valluvar, Buddha and Dr. Abdul Kalam may not sound magical nor touch our hearts immediately. But, when we follow and live according to those words, eventually, we will understand the depth of it.”

 

“Skill set development in India; that is the next Sathyagraha kind of movement that India should indulge in. There should be no monoculture in education.” Quoting the dialogue, ‘I want to know, I want to understand’, from an English movie, he said that teachers and students should not just stop with teaching and learning. Instead, they should try to understand what was taught.

 

Addressing the students as ‘the leaders of tomorrow’, Nammavar emphasized that students should enter into politics. “By politics, I not only mean electoral politics. All of us should dream and work towards developing our nation just like how our beloved Dr. Abdul Kalam did”, he said.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.