UP
DONATE NOW
Home > Events >
MNM party President Mr. Kamal Haasan' s an honorary doctorate celebrations at Head Quarters,Chennai
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுக்கு கிடைத்த கெளரவ டாக்டர் விருதிற்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்ப்பு நிகழ்ச்சி

MNM party President Mr. Kamal Haasan' s an honorary doctorate celebrations at Head Quarters,Chennai

மக்கள் நீதி மய்யத்தில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என கேட்பது நியாயமே இல்லை என்றும், தமிழகத்தின் நலனுக்காக இருவரும் இணைந்து செயல்படுவோம் என்பதே இப்போது நல்ல செய்தி எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஒடிசா செஞ்சூரியன் பல்கலைக்கழகத்திடம்  கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற பின் முதல் முறையாக கட்சி அலுவலகம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம கட்சி  அலுவலகத்தில் மேள தாளங்கள் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்..தொடர்ச்சியாக நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்த அவர்..

 மக்கள் நீதி மய்யம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயம் போன்றவை முக்கியமானவை என உணர்ந்துள்ளதாகவும்,
ஆட்சிக்கு வந்து மக்களுக்கு செய்வது வேறு, அதற்கு முன்பே அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளதாகவும், ரஜினியும் நானும் தேவைப்பட்டால் இணைவோம் என்று சொல்லியிருக்கிறோம், அதுவும் தமிழகத்தின் நலனுக்காக மட்டுமே என்றும், ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என்று கேட்பதில் கொஞ்சம் கூட நியாயமே இல்லை ,
இப்போது
நல்ல செய்தி என்பது தமிழகத்திற்காக இணைந்து செயல்படுவோம் என்பது தான் எனவும் கூறினார்.

 

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan stated that it is unfair to ask Mr. Rajinikanth to become a part of Makkal Needhi Maiam party and the good news, at present, is that both of them would work together for the benefit of Tamil Nadu.

 

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan, who visited the party office at Alwarpet, for the first time after receiving his honorary doctorate from Centurion University, Odisha, received a warm welcome from party administrators and members.

 

While addressing the party administrators and the media Mr. Kamal Haasan said that Makkal Needhi Maiam understands the importance of employment and agriculture for youngsters. Initiatives for the same have been taken even without coming to power. Recalling his earlier statement that Mr. Rajinikanth and he might work together, if necessary, solely for the benefit of Tamil Nadu, he said that it is unfair to ask Mr. Rajinikanth to become a part of Makkal Needhi Maiam party and the only good news, at present, is that both of them would work together for the benefit of Tamil Nadu.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.