UP
Home > Events >
Women’s Day Celebrations
சென்னை / Chennai

மகளிர் தினக் கொண்டாட்டம்

Women’s Day Celebrations

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெற்ற மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகளிர் குழுவினரால் இசைக்கப்பட்ட, பறை இசையுடன் துவங்கியது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர் திருமதி. கமீலா நாசர் வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலதிபர்கள் தீபா ஆத்ரேயா (நிறுவனர் - School of Success) காதம்பரி சுரேஷ் ( நிறுவனர் - WEDO) , மாணவிகள் ரூபன்யா, ஷாஹிதா ஆகியோர் மகளிர் தினம் குறித்தும், மகளிர் அதிகாரம் குறித்தும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர் திருமதி. ஶ்ரீப்ரியா ராஜ்குமார் ‘இல்லங்களில் பெண்கள் நடத்தப்படும் விதம்’ குறித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் சார்பாக சமூக சேவகிகள் மதுரை காந்திமதி அம்மாள், சேலம் தேவி, திருவள்ளூர் சுமதி ஆகியோர் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களது சமூக சேவைகள் தொடர்வதற்குப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, உரை நிகழ்த்தினார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ‘நம்மவர்’ திரு கமல்ஹாசன்.

The women’s day celebrations of Makkal Needhi Maiam was flagged off with a Parai performance by an all women troupe. Makkal Needhi Maiam core committee member Mrs. Kameela Nasser delivered the welcome speech. Entrepreneurs Deepa Athreya (Founder and CEO- School of Success) , Kadhambari Suresh (Founder WEDO) and Students- Roopanya and Shahidha shared their thoughts on Women’s day and women empowerment. Makkal Needhi Maiam core committee member Mrs.Sripriya Rajkumar also delivered a speech about how women are treated at home.

Makkal Needhi Maiam recognized Social workers Selam Devi, Thiruvallur Sumathi and Madhurai Gandhimathy and honored them with financial and technical support to work towards their cause. The event ended with Nammavar Kamal Haasan’s speech and Q and A session.