UP
DONATE NOW
Home > Events >
Nammavar supports students protesting at Madras University
சென்னை / Chennai

சென்னைப் பல்கலை. மாணவர்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு

Nammavar supports students protesting at Madras University

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நேரில் சென்று ஆதரவு அளித்தார். 


மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில்  சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பல்கலைக் கழக வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்  மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகம் வந்தார். ஆனால், அவர் உள்ளே சென்று மாணவர்களை காண போலீஸார் அனுமதிக்கவில்லை.
பின் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நுழைவுவாயில் பகுதிக்கு  வந்தனர். அவர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் தன் ஆதரவை தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், 
நான் கட்சிக்காரனாக இங்கு வரவில்லை. ஒரு இந்தியனாக என் ஆதரவை தெரிவிக்க வந்தேன். இங்கு படிக்கும் மாணவர்கள் தரமணியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். திடீரென விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு உடனே விடுதியையும் மூடிவிட்டனர். இத னால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்க இடம் இல்லாமல் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். அகதிகள் அதிகமாகி விட்டனர் அதனால் தான் இந்த சட்டம் கொண்டு வருகிறோம் என்று சொல்லி அரசே தன் சொந்த மாணவர்களை அகதிகளாக மாற்றுகிறது. சட்டங்கள் மக்களுக்கு பயன்படாது எனில் அவை மாற்றப்பட வேண்டும். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Students of Madras University have been staging an in-house protest from 17th December 2019. Makkal Needhi Maiam party President Mr. Kamal met the students today and extended his support to and joined hands with them to voice out against Citizenship Amendment Act 2019.

Protests against the CAA are happening all over the country. Following suit, Madras University students are protesting for the second day today. The police forces have been deployed around the campus to protect the students. Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan reached Madras University to support the students, however the police denied him entry.

Despite being denied entry, Mr. Kamal Haasan did meet the students, interacted with them and encouraged them to keep up the good work. 

Later, while addressing the media, he said, “I am not here representing any party. I’m here to support you as an Indian Citizen. They have declared a sudden holiday for the Taramani Hostels, rendering hundreds of students homeless and without food. They said they are amending the act because the number of refugees are increasing but they have managed to turn students into refugees. If the laws don’t benefit the people they must be changed. Hence, the CAA must be revoked.”
 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.