UP
DONATE NOW
Home > Events >
Students who invented a device to control accidents met Nammavar
சென்னை / Chennai

விபத்து ஏற்பட்டால் உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் பிரத்யேக கருவியை உருவாக்கிய மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்தனர்.

Students who invented a device to control accidents met Nammavar

இன்றைய காலகட்டத்தில் சரியான உதவியும், தேவையான தகவலையும் கொண்டு சேர்க்காததால் விபத்துக்களும் உயிர் பலியும் நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலம் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இணைந்து விபத்து ஏற்பட்டால் உடனடியாக அவசர விபத்து ஊர்தி, காவல்நிலையம் மற்றும் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த கருவி சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் புனே நகரில் நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சிறந்த கண்டுபிடிப்புக்கான முதல் இடத்தையும், ஆஸ்திரேயாவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் தமிழக அளவில் பல விருதுகளையும் பெற்றது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கே.முஹமது சாகுல் அமீது, ஆர்.நரேந்திர வர்மன் மற்றும் பேராசிரியர் கே.பி.வெற்றிவேலன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த கருவிக்கான சிறு விளக்கத்தையும் அறிமுகத்தையும் தெரிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

The number of accident causalities are on a rise due to the lack of communication and timely help. To bring this under control, the students of Mayilam Engineering College have invented a device that communicates the accident details to the nearest Hospital, Police Station and the victim’s family. 

This device has been awarded the 1st place in a competition for new inventions, conducted in Pune and 3rd prize in a competition of young inventers conducted in Australia and many other accolades.

The students behind this device Mr. K. Mohammad Shahul Hameed, Mr. R. Narendra Varman and Professor Mr. K. P. Vetrivelan met Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan today and explained the functioning of the device. Mr. Kamal Haasan then conveyed his best wishes to them.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.