UP
Home > Events >
Grama Sabha
அதிகத்தூர் / Adigathur

கிராம சபை

Grama Sabha

அதிகத்தூர் கிராமத்தின் பிரதிநிதிகள், தங்கள் கிராமத்தில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டத்திற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை, பார்வையாளராக வருவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக்கு சென்று பார்வையாளராக கலந்துகொண்டார். உடனடித்தேவைகளான, அதிகத்தூர் அரசுப் பள்ளிக்குத் தேவையாக இருக்கின்ற 3 வகுப்பறைகளை கட்டித் தரப்போவதாகவும் , அதிகத்தூரின் பல்வேறு பகுதிகளில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்றும், பசுமைக்காக மரங்கள் வளர்க்கப்படும் என்றும்,அதிகத்தூர் பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும் என்றும்,நீர் பாதுகாப்பிற்காக சிறு நீர்த்தேக்கங்கள்,மடைகள் கட்டப்பட்டு, குளங்கள் புனரமைக்கப்படும் என்று கூறினார். பின் அவர் மக்கள் நீதி மய்யம் புனரமைக்கவிருக்கும் குளத்தை சென்று பார்வையிட்டு பின்னர் இருளர் மற்றும் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

The representatives of Adigathur village invited party Makkal Needhi Maiam President Mr Kamal Haasan to their Grama Sabha as an observer on 1st May. Mr Kamal Haasan accepted their invitation and attended their Grama Sabha. He announced that Makkal Needhi Maiam has decided to take on priority the important requirements of Adigathur. He stated that we will build 3 more classrooms in the local school. Also, 100 toilets will be built at various parts of the village, and tree cover in the village will be improved. Workshops will be conducted for skill set development of Adigathur. Check dams and small reservoirs will be built to store water, and their local pond will be restored. Mr Kamal Haasan also visited the pond that Makkal Needhi Maiam was planning to restore and the settlements of Irulars and Nari Kuravars.