UP
Home > Events >
Women’s wing meeting
காஞ்சிபுரம் / Kanchipuram

மகளிர் அணிக் கூட்டம்

Women’s wing meeting

30.06.2018 அன்று மக்கள் நீதி மய்யக் கட்சியின் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட மகளிர் அணியின் கலந்துரையாடல், காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் திருமதி. ஸ்ரீப்ரியா, திருமதி. கமீலா நாசர் மற்றும் திரு. செளரிராஜன் கலந்து கொண்டார்கள். மகளிர் அணி சார்பில் திருமதி.நளினிபிரகாஷ் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திரு. தீனதயாளன், வேலூர் திரு. சத்யநாராயணன் தலைமை தாங்கினர், இந்த கலந்துரையாடலில், மகளிர் அணி மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் மற்றும் மகளிர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துதல் சம்பந்தமாக மக்கள் நீதி மய்ய மகளிர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வரும் ஆகஸ்ட் 15, இம்மாவட்டத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில், கிராமசபையை மக்களின் ஆதரவுடன், முழு வெற்றியோடு நடத்தும் வழிவகைகள் ஆலோசிக்கப்பட்டது.

Makkal Needhi Maiam party’s Women’s Wing meeting of Kanchipuram and Vellore districts happened on 30.06.2018. Core-committee members of the party, Ms Sripriya Ms Kameela Nasser and Mr Sowrirajan, participated in the event. on behalf of the Women’s wing, Ms Nalini Prakash, Mr Deenadayalan from Kanchipuram district, Mr Satyanarayanan from Vellore district presided over the event. During the interactive session, various suggestions regarding enhancement and improvement of the Women’s wing and measures to increase enrolment of Women members in the party. Apart from these, guidelines were discussed regarding conducting of Gram Sabha meetings to be held in the villages falling under these districts with the support of local people.