UP
Home > Events >
Sterlite Protester Sivakumar met Nammavar
சென்னை / Chennai

ஸ்டெர்லைட் போராளி சிவகுமார் நம்மவரைச் சந்தித்தார்

Sterlite Protester Sivakumar met Nammavar

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினரும் கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் தூத்துக்குடி மாநகர பொறுப்பாளருமான திரு. சிவக்குமார், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் பொழுது நடைபெற்ற காவல்துறை துப்பாக்கி சூட்டில், குண்டடிபட்டு படுகாயமடைந்த பல பெண்களை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று தக்க சமயத்தில் அவர்கள் உயிரைப் பாதுகாத்து அரும்பணியாற்றியதில் மிக முக்கியமானவர்.

பயிற்சி அளிக்கப்பட்ட நிபுணர்களை கொண்டு, SLR ரக துப்பாக்கிகளில், தொலைநோக்குக் கருவிகளை பொருத்திக்கொண்டு, தங்கள் வேன்களில் ஏறி நின்று, சட்டவிதிகள் எதையும் மதிக்காமல், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ”அதிகாரப்பூர்வமாக” 18 நபர்கள் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்களை, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, ஏறத்தாழ 70 பேருக்கும் மேலானவர்களின் உயிரைக் காப்பற்றியதில் முக்கிய பங்காற்றிய சிவக்குமாரை அரசோ, காவல்துறையோ, பாராட்டவோ நன்றி தெரிவிக்கவோ இல்லை.

ஆனால் அவர் மீது கலவரத்தில், அதுவும் ஒரே நேரத்தில் பல இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக்கொண்டு சென்ற படி பலமுறை அவர் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லி அவர் மீது வழக்குகள் திணிக்கப்பட்டன.

திரு. சிவக்குமார் அவர்களின் மீது வலிய வழக்குகள் திணிக்கப்பட்டிருப்பதை அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, அவருக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் உதவி செய்து அவர் பிணையில் வெளிவர உதவி செய்தது.

அதற்கு தனது நன்றியினைத் தெரிவிக்கும் வகையில், திரு. சிவக்குமார் அவர்கள், தனது குடும்பத்தினருடன் ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

Mr Sivakumar – a Makkal Needhi Maiam party member and Kamal Haasan Narpani Iyakkam city in-charge for Tuticorin, played an active role in helping the ladies injured when the police opened fire on protestors against the Sterlite factory. Police opened fire without following legal procedures, trained snipers with SLR guns fitted with telescopes took pot shots from atop police vans. 18 people died. Mr. Shivakumar lent his hand in increasing the number of survivors (70) by assisting as many as he could in time to the Hospital. He was arrested for that. The reason for the arrest? He was seen in the surveillance camera many times carrying a new victim into the hospital. Instead of a hand shake or a praise, he was kept in jail for 35 days. 22 cases had been booked against him. Most of them involving him in various acts of arson at the same time at various location.

Makkal Needhi Maiam after learning about these foisted cases and arrest, assisted him to be released on bail.

Mr Sivakumar wished to express his gratitude to Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan and hence met him at the party head office in Alwarpet with his family and expressed his gratitude.

CONTACT US
JOIN US