UP
Home > Events >
Nemilichery Grama Sabhai
நெமிலிச்சேரி, சென்னை / Nemilichery, Chennai

நெமிலிச்சேரி கிராமசபைக் கூட்டம்

Nemilichery Grama Sabhai

திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் திருமதி. கமீலா நாசர் கலந்துகொண்டார்.

கிராமசபை, கால தாமதமாகக் கூட்டப்பட்டது. மக்களின் தேவைகளையும் உரிமைகளையும், பெரும் வகையில், சாலைகளை சீரமைக்கவும், கால்வாயை சீரமைக்கவும், புது தெருவிளக்குகள் அமைக்கவும், குழந்தைகள் விளையாட மைதானம் அமைக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்பு, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் நடைமுறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கிராம மக்கள் அறிவித்தனர். சாலைகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளது, மழைக் காலத்தில் அவர்களை, குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்களை பெரிதும் பாதிப்பது பற்றியும், சமூக நலக்கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பது, போதிய தெருவிளக்குகள் இல்லாதது, தண்ணீர் வசதிகள் இல்லாதது ஆகிய அடிப்படை தேவைகள் கூட பல முறை மனு கொடுத்த பின்பும் சரி செய்யப்படாததை குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர்.

கிராம மக்கள் கேட்டதின் பேரில் கிராமத்தின் செலவு கணக்கு வாசிக்கப்பட்டது ஆனால் வரவு குறித்து தகவல் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்கேற்பு ஜனநாயகத்தின் முழு வலிமையை இக்கிராம சபையில் காண முடிந்தது. இம்முறையாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தங்கள் குறைகளைப் போக்க மக்கள் மனுக்களை அளித்தனர்.

State Executive Committee member of Makkal Needhi Maiam Mrs. Kameela Nasser participated in the Grama Sabhai of Nemilichery village, Tiruvallur district on this day.

The Gram Sabhai commenced later than the fixed time. Resolutions were passed regarding the needs and rights of local residents, major repair work for roads, renovation of canals, installing new street lights, playground for children.

Residents of the Villages complained of no follow up action being taken post passing of resolutions. Further the residents complained that specific issues such as horrendous condition of roads especially during Rains affecting the residents in general and more specifically the children of the locality, lack of adequate number of street lights, lack of drinking water facilities, have been raised numerous times and in spite of repeated petitions and representations to concerned authorities no concrete action has been taken yet.

It is pertinent to note that the expenditure statement of the Gram Sabhai was read out due to the insistence of the local residents, but the income statement was not read out. The true strength of participative democracy was illustrated in this meeting.