UP
Home > Events >
Tree plantation drive at Maharani College
தாராபுரம் / Dharapuram

மகாராணி கல்லூரியில் மரம் நாடும் நிகழ்ச்சி

Tree plantation drive at Maharani College

‘தாராபுரம் மகாராணி கல்லூரியில்’ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

அதன் பின் மாணவர்களுடன் உரையாடும்பொழுது அவர், “நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். மரக்கன்று நட்டது போல உங்கள் மனதில் விதை தூவி விட்டுச்செல்ல வந்திருக்கிறேன்.

நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது அதை மறந்துவிடாதீர்கள். நான் மட்டும் தனியே எதுவும் செய்துவிட முடியாது. நீங்களும் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan flagged off a tree planting drive by planting a sapling at the ‘Maharani College, Dharapuram’.

While interacting with the students, he said, “I’m here to emphasise that students should think about the future. I would like to sow the seeds of thought in your minds just like how I planted the sapling.

Don’t forget that the power to build the future Thamizh Nadu lies in your hands. I cannot do anything by myself, we need to do it together.”