UP
Home > Events >
Representatives from ‘Elders for Elders Foundation’ meet Nammavar
சென்னை / Chennai

‘முதியவர்களுக்காக முதியவர்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் நம்மவரைச் சந்தித்தனர்.

Representatives from ‘Elders for Elders Foundation’ meet Nammavar

‘முதியவர்களுக்காக முதியவர்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

“முதியவர்களுக்காக முதியவர்கள் அமைப்பு” எனும் அமைப்பு தமிழகம் முழுவதும் இருக்கிறது. இந்த அமைப்பில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதியவர்களுக்கான நலத்தினைப் பாதுகாத்திட இந்த அமைப்பு “ஹெல்ப் ஏஜ் இந்தியாவால்“ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகையை உயர்த்துவது குறித்த கோரிக்கையுடன் இவர்கள் 1500 பேர்களுடன் டெல்லி “பென்சன் பரிசத்” எனும் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழகம் சார்பாகக் கலந்து கொண்டு, திரு பிரணப் முகர்ஜி மற்றும் திருமதி பிருந்தா காரத் ஆகிய தேசிய தலைவர்களைச சந்தித்து திரும்பிய நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரை நேரில் சந்திக்க வந்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோ ர்களின் பாதுக்காப்பினையும் அவர்கள் நல்வாழ்க்கைக்கான உறுதியையும் நிலைநாட்டிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை சந்தித்து ‘முதியோர் ஊக்கத் தொகையை உயர்த்திட வேண்டும்’ என்ற கோரிக்கை மனு ஒன்றினையும் அளித்தனர். அக்கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், ‘என்னுடைய பெற்றோரை பாதுகாக்க வேண்டியதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியது இல்லை. நேற்றைய இளைஞர்கள் நீங்கள். நாங்கள் நடந்து செல்லும் சாலை நீங்கள் இட்டது. என்னுடைய பெற்றோருக்கு வேண்டியதை செய்யவது என் கடமை. நீங்கள் தமிழர்கள், உங்களை பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமை. அவர்களின் கோரிக்கையினை வலுப்படுத்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி முன்னெடுக்கும்’ என்று தெரிவித்தார்.

Representatives from ‘Elders for Elders Foundation’ met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party head office.

‘Elders for Elders Foundation’ has thousands of members all over Thamizh Nadu. It is an organisation established by ‘HelpAge India’ to work towards the welfare of the elderly people.

1500 representatives of the foundation returned to Chennai after representing Thamizh Nadu in the public meeting held regarding increasing the ‘Old age pension’ in Delhi, organised by ‘Pension Parishad’. They met National leaders Mr Pranab Mukherjee and Mrs Brinda Karat Following which, more than 50 representatives of the foundation met the party President.

They submitted a petition stating their demand for the ‘Old age pension of Rs.3000 to be granted to the elderly’ which in-turn will uplift and provide a safe and dignified life for them, to Mr Kamal Haasan. He received their petition, and said “I don’t require anybody’s permission to protect my parents. You are the youngsters of yesterday. The road that we walk on, was laid by you. Hence, it is our duty to take care of your well-being. You are Thamizhians, it is the duty of Thamizhians to protect you.” and assured Makkal Needhi Maiam party’s support to their cause.