UP
Home > Events >
Farmers from TN meet Nammavar
சென்னை / Chennai

தமிழ்நாட்டு விவசாயிகள் நம்மவரைச் சந்தித்தனர்.

Farmers from TN meet Nammavar

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுருந்தும், பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 1000 ற்கும் மேற்பட்டோர், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்தனர்.

தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்கள் பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களிடம், விவசாய அமைப்பினர் விரிவாக எடுத்துக்கூறினர்:

  1. தற்போதைய பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் ஒவ்வொருவரும் தனியாக ப்ரிமியம் கட்ட வேண்டும் ஆனால் ஒரு முழு கிராமமே பாதிக்கப்பட்டிருந்தால் தான் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலை மாறி தனி நபர்களுக்கும் பயிர்க்காப்பீடு வழங்கப்படவேண்டும்.
  2. கரும்பு விவசாயிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்படவேண்டும்.
  3. விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும்.

திரு.கமல் ஹாசன் அவர்கள் விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு தானும் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியும் அவர்களுடன் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். விரைவில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விவசாயிகள் நன்றி சொல்லும் காலம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விவசாயிக்கு ஒரே மதம், அவர்களுக்குள் சாதி இல்லை. அப்படிப்பட்ட விவசாயக்குடும்பத்தில் தானும் இணைந்து கொள்வதில் தனக்கு பெருமையே என்று தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான மாபெரும் பொதுக்கூட்டம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது என்று அறிவித்தார்.

விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளான திரு நாகை கிரிதரன், திரு அன்வர், திரு எஸ்.ஆர். தேவர், திரு சண்முக சுந்தரம் மற்றும் டாக்டர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயி இயக்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் திரு. பி.கே.தெய்வசிகாமணி அவர்கள் தலைமை வகித்தார்.

More than 1000 representatives and members of various farmers organisations from all over Thamizh Nadu met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan on this date.

The farmers spoke in detail about the various issues that they face, like:

  • Compensation is provided to farmers only if the crops of the entire village is affected.The compensation for crop damage should be provided to individual farmers even if only a single farmer is affected.
  • The arrears of the sugarcane farmers should be granted immediately.
  • The loans of the farmers must be waived.

Mr Kamal Haasan said, “Their demands are justified. Makkal Needhi Maiam will work towards ensuring that their demands are met. Very soon, farmers will express their gratitude for the work Makkal Needhi Maiam has done for them. Farmers have no caste, their only religion is farming. I am happy to be a part of your family.”

He also announced that a grand public meeting for the farmers of Thamizh Nadu will be held in December.

Mr P.K.Dheivasigamani – President, Thamizh Nadu Vivasaaya Iyakangalin Kootu Iyakkam presided over the meeting. Esteemed leaders of various farmer’s organisations like Mr Naagai Giridharan, Mr Anwar, Mr S.R. Dhevar, Mr Shanmuga Sundaram and Dr. Thangaraj were in attendance.