UP
Home > Events >
Raudram App launch
சென்னை / Chennai

ரௌத்ரம் செயலி வெளியீடு

Raudram App launch

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘ரௌத்ரம் செயலியை’ இன்று சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெளியிட்டார்.

பெண்கள் ஆபத்து நேரங்களில் இச்செயலியின் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், தங்கள் அவசர தொடர்பு எண்களுக்கு (emergency contacts) குறுஞ்செய்தி, புகைப்படங்கள் மற்றும் காணொளி கட்சிகளை எளிதில் அனுப்பலாம்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெண்கள் பாதுகாப்பு குறித்து உரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் திரு கமல் ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி கமீலா நாசர், திருமதி ஸ்ரீப்ரியா, திரு சி.கே.குமாரவேல், திரு ராஜநாராயணன், திரு சிநேகன், ஆகியோர் மற்றும் திருமதி ரூபா ஐ.பி.எஸ். கலந்துகொண்டனர்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan launched ‘Raudram’ – an app for women’s safety at Sairam Engineering College on this date.

Raudram app enables women to send messages, photos and videos to their emergency contacts with a click of a button during times of emergency.

Mr Kamal Haasan interacted with the students of Sai Ram College about women’s safety and answered their questions.

Makkal Needhi Maiam party’s General Secretary Mr A.Arunachalam, and State Executive Committee members Mrs Kameela Nasser, Mrs Sripriya, Mr C.K.Kumaravel, Mr Rajanarayanan, Mr Snehan and Ms Roopa I.P.S also participated in the event.