UP
Home > Events >
Nammavar at S.S.M college
குமாரபாளையம் / Komarapalayam

எஸ்.எஸ்.எம் கல்லூரியில் நம்மவர்

Nammavar at S.S.M college

SSM கல்லூரியில் நடைபெற்ற “செவாலியர் சிவாஜி கணேசன் 9௦வது பிறந்தநாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், ‘செவாலியர் சிவாஜி கணேசன் நூலகத்தை’ திறந்து வைத்தார். இவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு உறுப்பினர் திரு பாரதி கிருஷ்ணகுமார், இயக்குநர் அமீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்விழா திரு ராம்குமார் கணேசன் மற்றும் திரு பிரபு கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்றிய நம்மவர், “மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது, என்று நம்மவர் திரு கமல்ஹாசன் கேள்வியெழுப்பினார். சிவாஜி அவர்கள் மடியில் வளர்ந்து, எம்.ஜி.ஆர். அவர்கள் தோளில் விளையாடி, கலைஞருடன் கை குலுக்கிய நடிகன் இன்று அரசியல்வாதி ஆகியிருக்கிறேன், ஜாக்கிரதை.” என்றார்.

MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan was the Chief Guest of the “90th Birthday celebrations of Chevalier Sivaji Ganesan” at S.S.M College, Komarapalayam.He inaugurated the “Chevalier Sivaji Ganesan Library” on this day. MakkalNeedhi Maiam party state executive committee member Mr Bharathi Krishnakumar and Director Ameer were the special invitees for the event which happened in the presence of Mr Ramkumar Ganesan and Mr Prabu Ganesan.

While addressing the students gathered there, MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan said, “There is a GO that prohibits students from discussing politics, but who better qualified to discuss politics than them?” he asked. He further said, “I grew up in Mr Shivaji Ganesan’s lap, played with Mr M.G.R and worked with Mr Karunanidhi. I am the only actor who has interacted with all the three legends and I have turned a politician today. Beware.”