UP
Home > Events >
Wheelchair Basketball Players Association of Tamil Nadu congratulated by Nammavar
சென்னை / Chennai

வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் நம்மவரிடம் வாழ்த்துப் பெற்றனர்.

Wheelchair Basketball Players Association of Tamil Nadu congratulated by Nammavar

தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து கழகத்தின் சார்பாக விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் அவர்களை நேரில் சந்தித்தனர்.
 5வது தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து சேம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றதை தெரிவித்து வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டு, தங்களின் குறைகளை திரு கமல் ஹாசன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
தாங்கள் விளையாடுவதற்கும் பயிற்சிகள் பெறுவதற்கும் தேவையான உள் அரங்குகள் போதுமான அளவு இல்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளை உள்ளடக்கிய மைதானங்களும், கழிப்பறை வசதிகளும், பயணத்திற்கு தேவையான வாகனங்களும் இல்லை என்று தெரிவித்தனர்
அவர்களின் குறைகளையும் கேட்டறிந்த நம்மவர், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நீதி மய்யம் கட்சி உடனடியாக செய்திடும் என்று அவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
 

Members of Wheelchair Basketball Players Association of Tamil Nadu met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan today at the party office today. The Tamil Nadu team emerged as the runners up in the 5th National Wheelchair Basketball Championship. They have managed to achieve this feat without proper wheelchairs and proper stadium facilities. They discussed in detail about the problems that they face during practises and the facilities that they require in order to improve their performances like: 
• Indoor stadium with ramp facility and differently abled friendly restrooms. 
• Wheelchairs of International quality. 
• Transport and accommodation facilities. 
Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan congratulated them on their victory and assured them that MNM will stand by them and extend its full support to them.