UP
Home > Events >
MakkalUdanaanaPayanam
நாமக்கல் / Namakkal

மக்களுடனான பயணம்

MakkalUdanaanaPayanam

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் இன்று மல்லூர், ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையத்தைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தார்.

ஆண்டலூர் கேட் என்ற பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தலைவா திரு கமல் ஹாசனைக் காண காத்திருந்த தகவலை அறிந்த அவர், அவ்வழியே செல்லும் திட்டம் இல்லாவிட்டாலும், ஆண்டலூர் கேட் வழியே சென்று, மக்களைச் சந்தித்தார் அவர்களுடன் உரையாடினார்.

மக்களிடம் பேசும்போது தலைவர் திரு கமல் ஹாசன், “உங்கள் மாவட்டத்தில் பரவலாக பார்க்கும்போது, 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது, அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் தினமும்  திறக்கப்பட்டுகின்றன. எந்த தண்ணீர் மக்களுக்கு முக்கியம் என்று அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.” என்றார்.

சென்ற இடமெல்லாம் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களையும் கூட்டத்தில் காண முடிந்தது. பணம், சாராயம், பிரியாணி என எதையும் எதிர்பார்க்காமல் தலைவர் திரு கமல் ஹாசன் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் சேர்ந்த கூட்டம் என்று உணர முடிந்தது.

 

Makkal Needhi Maiam party President met the party members and general public of Mallur, Rasipuram, PudhuChathiram, Namakkal, Pallipalayam and Kumarapalayam on this day.

Mr Kamal Haasan learnt that people were waiting to welcome in Andalur Gate, he asked the convoy to be redirected towards Aandalur gate, even though it wasn’t a part of the itinerary. He then interacted with the party members and general public gathered at Aandalur gate.

While interacting with the public, he said, “These regions get fresh water only once in every 15 days. But the TASMAC wine shops are open every single day. The Government needs to rethink its priorities and understand the needs of the people.”

Thousands of people had gathered at each and every point. All kinds of people including women, children and the elderly were a part of the crowd. It was heartening to note that the people had gathered there just to express their love and admiration for Mr Kamal Haasan and didn’t expect anything in return. The crowd gathered didn’t want money, alcohol or biryani, all they wanted was a glimpse of their beloved political leader.