UP
Home > Events >
Meeting with the Lorry Owners Association
நாமக்கல் / Namakkal

மெக்கானிக் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நம்மவர்

Meeting with the Lorry Owners Association

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், ‘பாடி பில்டர் சங்கம் மற்றும் மெக்கானிக் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை இன்று நாமக்கல்லில் சந்தித்தார்.

தலைவர் திரு கமல் ஹாசனிடம் அவர்கள் தங்கள் தொழிலில் சந்திக்கும் இன்னல்களைப் பற்றி விரிவாக கூறினர்.

அவர்களிடம் உரையாடிய நம்மவர், “என் மக்களுடனான பயணம் உங்கள் இன்னல்களை புரிந்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் உங்கள் கருத்துகளைக் கேட்பது இல்லை. 8 வழி சாலையோ 1௦ வழி சாலையோ, உங்களுக்குத் தேவையான சாலையையே அவர்கள் அமைக்க வேண்டும். இங்கு வட்ட சாலை தேவையாக உள்ளது, அதை அமைத்தால் லாரிகள் செல்ல வசதியாக இருக்கும்.  அதை அமைப்பதே அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

நீங்கள் பெட்ரோல் விலை உயர்வைப் பற்றி கூறினீர்கள். கொஞ்சம் ஆழமாக யோசித்தால், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் எவ்வாறு எமற்றப்பட்டிருக்கிரார்கள் என்பதை நாம் உணரலாம். கச்சா எண்ணெய் ஒரு பாரல் 44 டாலருக்கு விற்கப்பட்ட போது பெட்ரோல் விலையை அரசு குறைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடந்த 5 வருடங்களாக அதிக விலைக்கு பெட்ரோல் விற்று அரசு சம்பாதித்த லாபம் 4.5 லட்சம் கோடி. அது உங்கள் பணம், உங்கள் உரிமை. அதை பற்றி நீங்கள் கேட்க வேண்டும். உங்களுடன் மக்கள் நீதி மய்யம் துணைநிற்கும். நாங்கள் ஆளும் கட்சி இல்லை, ஆனாலும் உங்கள் உரிமையை நிலைநாட்ட மக்கள் நீதி மய்யம் ஆவன செய்யும். எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கும் உங்கள் குறைகளை எங்களிடம் பகிர்ந்ததர்க்கும் நன்றி.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan met the leaders and representatives of Lorry Owners Association, Mechanics Association, Body Builder Association on this day at Namakkal.

The leaders of Lorry Owners Association discussed in detail about the challenges that they face in their profession.  

Addressing the gathering, he said, “My 'Makkaludanaanapayanam' is to learn about your problems. State and center government don’t listen to the opinion of the common public, that is the reason for many problems.Be it 8 or 10 lane road, they should construct it based on your demands. You need a circle road here, because of the sheer volumes of the lorries, construction of the circle road should be it’s priority.

You spoke about the fuel price. Going to the core of the issue, we can understand that how you have been cheated for the past 5 years. One barrel of Crude oil was sold for 44$ 5 years ago, yet the price of petrol wasn't reduced. They kept increasing the price of the petrol and earned 4.5 lakh crores per year.This is your money, you should ask them about your rights. MNM will help for the same. We aren't the government, but we will ensure they will do it.Thank you for the opportunity and for discussing your querieswith MNM.”