UP
Home > Events >
Tiruchengode Public Meeting
திருச்செங்கோடு / Tiruchengode

திருச்செங்கோடு பொதுக்கூட்டம்

Tiruchengode Public Meeting

திருச்செங்கோட்டில் மக்களைச் சந்தித்து மேடையில் பேசவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், லாரி மீது ஏறி அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் உரையாடினார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன்.

மழை பெய்த போது, குடை வேண்டாம் என்று மறுத்து, மக்கள் மழையில் நனைந்தால், நானும் நனைவேன் என்று கூறி, எனக்கும் மக்களுக்கும் இடையிலான அன்பின் காரணமாகத்தான் இந்த மழை என்று நம்மவர் சொல்ல மக்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.

உங்கள் குறைகளைக் கேட்கவே மக்களுடனான பயணம், இப்போது உங்கள் குறைகளை மக்கள் நீதி மய்யம் கேட்கும், பிறகு அவற்றை நீக்க ஆவன செய்யும் என்று உறுதியளித்தார் தலைவர் திரு கமல் ஹாசன்.

மக்கள் மழையைப் பொருட்படுத்தாமல், தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பேச்சைக் கேட்க காத்திருந்தது, மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அன்பை உணர முடிந்தது.

Permission to erect a stage and interact with the people from the stage was denied at Thiruchegode, so MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan addressed thousands of party members and general public by standing on top of a lorry.

When it rained during the public meeting, Mr Kamal Haasan was offered an umbrella, but he refused to take it, saying, “If the people are getting drenched in the rain, then so will I. It is raining because of the love between us.” The crowd cheered in agreement as he uttered these words.

‘MakkalUdanaanaPayanam’ is to learn about the problems you face. MakkalNeedhi Maiam will learn about it now and then work towards eradicating it.

It was heartening to know that the people waited in spite of the rain to catch a glimpse of MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan and to listen to his speech. It was an expression of their belief, trust and love for the party and their leader.