வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் திரு.ராகுல் காந்தி - தலைவர் கமல்ஹாசன்.

13 மே, 2023

                `

திரு.ராகுல் காந்தி, உங்களின் இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
காந்தியாரைப் போலவே நீங்களும் மக்களின் இதயத்துள் நடந்தபடி இலகுவாகப் பிரவேசித்துள்ளீர்கள். அவரைப் போலவே , இந்த உலகின் மாபெரும் சக்திகளை அசைக்க , அன்பும் பண்பும் போதும் என்பதையும் நிரூபித்துள்ளீர்கள் .

தங்களின் மென்மையான அணுகுமுறை, சுய தம்பட்டம் இல்லாத பணிவு ஆகியவை உங்கள் நம்பகத்தன்மையைப் பறைசாற்றி , அரசியல் அணுகுமுறைக்கு புது சுவாசம் ஏற்றியுள்ளது.
பிரிவினைவாத சக்திகளை கர்நாடக மக்கள் நிராகரிப்பார்கள் என நீங்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகி , அவர்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் . இந்த வெற்றிக்கு மட்டுமல்ல... இந்த வெற்றி வகுக்கப்பட்டப் பாதைக்கும் எனது பாராட்டுக்கள் !​

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1657329194744020994?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0CmAmCRdh5xja8rZEgUTsRQg2YM9BWyEgTEFBNGEMpPUeWarh8VLeS1DjCagxqzeol&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.