மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி!பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

10 மார்ச், 2023

                `

மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ் அறிக்கை.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. பாதுகாக்கப்பட வேண்டிய பேருயிர்கள் மின்சார வேலியில் சிக்கியும், ரயிலில் அடிபட்டும் உயிரிழப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. 

வன உயிரினங்களிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பதை தவிர்த்து, விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை காட்டுக்குள் திருப்பியனுப்பும் வழிமுறைகளைக் கையாள வேண்டும். வேளாண் நிலங்களைச் சுற்றி சீரான இடைவெளியில் தேனீக் கூடுகளை நிறுவி ‘தேனீ வேலி’ அமைப்பது போன்ற யுக்திகளைப் பயன்படுத்தலாம். 

மேலும், உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் நுழையும் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்து, பாதுகாப்பை உறுதி செய்யவும், மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கவும் வனத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

- முரளி அப்பாஸ், 
மாநில செயலாளர், 
ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு, 
மக்கள் நீதி மய்யம்




சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.