நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை வரவேற்கும் விழா, இன்று (14.06.2025) சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், மய்ய உறுப்பினர்கள், மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 11.30 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆரவாரமான கரகோஷங்களுடன் வரவேற்றனர்.
முதலில், நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை சந்தித்த தலைவர், அவர்களின் மனமார்ந்த வாழ்த்துகளை பெற்றார். பின்னர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மண்டல அமைப்பாளர்களைச் சந்தித்து, அவர்களின் ஆதரவையும், வாழ்த்துகளையும் ஏற்றார்.
தொடர்ந்து, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் அன்பையும், உற்சாகமான ஆதரவையும், வாழ்த்துகளையும் பெற்றார்.
இத்துடன், பெண்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக, கபாடி போட்டிகளில் தொடர் சாதனை படைத்து வரும், சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த கபாடி வீராங்கனைகளுக்கு, கமல் பண்பாட்டு மையம் சார்பில், 5 இலட்சம் மதிப்பிலான, கபாடி ரப்பர் மேட் ஆடுகளம் (Kabaadi Mat) வழங்கப்பட்டது.
மேலும், கட்சியின் மகளிர் அணி சார்பில் மாநிலச் செயலாளர் திருமதி. சினேகா மோகன்தாஸ் (சென்னை, காஞ்சி, விழுப்புரம் மண்டலங்கள்) அவர்களின் முன்னெடுப்பில், INDIA TURNS PINK என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, MAMMOGRAM எனும் மார்பக புற்றுநோயை கண்டறியும் கருவி, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டு, Dr. RSB நிறுவனத்தின் 1000 துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1933897405130506260
Facebook: https://www.facebook.com/share/p/16SkYF75Dk/
Instagram: https://www.instagram.com/p/DK4o-2mJm7F/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==