அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக முடிசூட்டினோம்.

6 February 2026

அப்போது ஒரு குழப்பமான யதார்த்தத்தை நான் உணர்ந்தேன். "இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்" என்று நமது அரசியல் சாசனம் வழங்கிய வாக்குறுதிகள், நிஜத்தில் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்த யதார்த்தம் .

பல தமிழாசிரியர்கள் எனக்கு என் மொழியை அறிமுகப்படுத்தினார்கள். மகத்தான அரசியல் தலைவரான திரு. சி.என். அண்ணாதுரையும் அவர்களுள் ஒருவர். பிரஞ்சு மொழியில் 'D.U.R.A.I' (du Rai உச்சரிப்பில் Dukhwa) என்றால் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக முடிசூட்டினோம்.

எங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் உரிமைகள் மீது நிகழ்த்தப்படும் எந்தவொரு ஊடுருவலையும் எப்படி எதிர்கொள்வது என்று அண்ணா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். தமிழ் மீது கொண்ட பற்று என்னை அவரை நோக்கி உந்தித்தள்ளியது. ஏறக்குறைய 57 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று இந்தப் பெருமக்களிடையே பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நேற்று, பிப்ரவரி 3 (1969), எனது சித்தாந்தமான 'மய்யவாதத்தின்' (Centrism) தந்தைகளில் ஒருவரான அவர் என்னை அநாதையாக விட்டுச் சென்ற நாள். அப்போது எனக்கு வயது 14 தான், ஆனால் அவர் எனக்காக என் சகோதர சகோதரிகளை விட்டுச் சென்றார்.

- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்கள்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajyaSabha

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2019716448281837654?s=20

Facebook: https://www.facebook.com/share/v/1KnRVSTyPy/

Instagram: https://www.instagram.com/reel/DUaamyhCiYp/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post