மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களை கட்சியின் தலைமை நிலையத்தில்,
கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாராந்தை, காணிக்கூர், மற்றும் எஸ்.வாகைக்குளம் ஊராட்சிகளின் தலைவர்கள் திரு. R.கருப்பையா, திரு. செ. தென்னரசி செல்லப்பாண்டியன், திரு. வ.ஜெயலட்சுமி வடமலை மற்றும் அந்த ஊராட்சிகளின் உறுப்பினர்கள் நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது மூன்று ஊராட்சி தலைவர்களும், தங்கள் தங்கள் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான நிதியினை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின், மாநிலங்களவை உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொண்டு, அதற்கான கோரிக்கை மனுக்களை, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களிடம் வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்டு, விளக்கங்களை கேட்டறிந்த பொதுச் செயலாளர் அவர்கள்,
இந்த விவரங்களை கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களிடம் எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalneedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2002016066470605229
Facebook: https://www.facebook.com/share/p/1BbGMxvq31/
Instagram: https://www.instagram.com/p/DScpYxECd4V/?img_index=1&igsh=MXVvbzU5b2ZmajN5ag==