"தெற்கு தேயவே தேயாது. தேயவும் விடமாட்டோம்" - மனிதநேய விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாழ்த்துரை.

2 March 2026

”தெற்கு தேயவே தேயாது. தேயவும் விடமாட்டோம்” - மனிதநேய விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாழ்த்துரை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவான,

மக்கள் முதல்வரின் மனிதநேய விழா, 

மாண்புமிகு இந்துசமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் முன்னிலையில், 

வேப்பேரி - பெரியார் திடலில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில், “தமிழ் இனத்தின் குரல் டெல்லிக்கு கேட்கத் தொடங்கிவிட்டது. இனி தெற்கு தேயவே தேயாது. தேயவும் விடமாட்டோம்” என்றும்,

“பிறந்த நாள் காணும் இந்த தலைவரை, தேசிய அரசியல் களம் காண வைக்கப்போகிறோம் நாம் என்பதை மறந்துவிடாதீர்கள். தேசத்தின் நலன் கருதித்தான், இந்தக் கூட்டணியில் சேர்ந்தோம். திராவிடம் நாடு தழுவியது. அதற்கான சான்றுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.”

“இது திராவிடர்களின் போராட்டம். அதன் நாயகன் திரு. மு.க. ஸ்டாலின். அவருக்குத் தோள் கொடுக்க வேண்டியது தமிழனின், இந்தியனின் கடமை. நான் இரண்டும்தான். நாளை நமதாக வேண்டும். இன்னும் நூறு வருடங்கள் திராவிடம் பெருக வேண்டும்.”

மேலும் “முதல்வரை வாழ்த்தும் ஒரு எம்பியாக நான் நினைக்கவில்லை; அண்ணணை வாழ்த்தும் ஒரு தம்பியாக நினைக்கிறேன்” என்றும் வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள், 

இந்து சமய சொற்பொழிவாளர் – எழுத்தாளர் திரு. சுகி. சிவம் அவர்கள் உள்ளிட்டோருடன், 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மெளரியா IPS (ஓய்வு) அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. மூர்த்தி, திரு. ராகேஷ் ராஜசேகரன், மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், மாணவர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சைதை ஜெ.கதிர், திரு. மாறன், திரு. தேசிங்குராஜன், திரு. அனஸ், மாவட்ட அமைப்பாளர் திரு. துரை முருகன், திரு. வீரசிம்மன் ஆகியோருடன் மாநில, மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#HBDCMMKStalin

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2028356863184806332?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1L1G6kVrM9/

instagram: https://www.instagram.com/p/DVXvAB4CQjO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post