விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 'மாவீரன் திப்பு சுல்தான்' ஆட்டோ நிறுத்த பெயர் பலகை திறப்பு விழா.

10 September 2024

மக்கள் நீதி மய்யம், நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் “மாவீரன் திப்பு சுல்தான்” ஆட்டோ நிறுத்த பெயர் பலகை திறப்பு விழாவானது, விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் சிறப்பாக நடைபெற்றது.

இளையரணி மாநில செயலாளர் திரு. சினேகன் அவர்கள், நமது கட்சி கொடி மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் கொடியினை ஏற்றி வைத்து, ஆட்டோ நிறுத்த பெயர் பலகையை திறந்து வைத்தார். 

மாவட்ட செயலாளர் திரு. சந்தோஷ் குமார், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ஜாபர் அலி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர்கள் திரு. பாசில், திரு. ஓம்பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. S.ராஜலட்சுமி, நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் திரு.சொக்கர், திரு. V.ரவிச்சந்திரன், திருமதி. பானுமதி, நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் திரு. S.சரவணன், திரு. P.S.சரவணன், திரு. கௌஸ்பாஷா மற்றும் மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1833490245750518054

Facebook: https://www.facebook.com/share/p/94bQZpE54xH5ssks/

Instagram: https://www.instagram.com/p/C_vMskFPfY3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post