மக்கள் நீதி மய்யம் சார்பில் விருகம்பாக்கத்தில் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

21 April 2025

மக்கள் நீதி மய்யம் சார்பில் விருகம்பாக்கத்தில் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கோடை வெயிலில் தவிக்கும் மக்களுக்காக விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நீர், மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் விருகம்பாக்கம் மநீம மாவட்ட சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளர் திரு. த.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. சக்கரவர்த்தி, திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் திருமதி. விஜி, திரு. பொன்னுசாமி, சமூக ஊடக அணி துணை அமைப்பாளர் திரு. செல்வகுமார், நகரச் செயலாளர்கள் திரு. சரவணன், திரு. புருஷோத்தமன், திரு. அலெக்ஸ், வட்டச் செயலாளர்கள் திரு. ராஜ், திரு. கமல், திரு. சுப்பிரமணியன், திரு. வெங்கடேஷ், திரு. கணேஷ், திரு. பாலராமன், கிளைச் செயலாளர்கள் திரு. யோகேஷ், திரு. பெருமாள், திரு. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் திரு. மணிகண்டன், திரு. ஜீவா திருமதி. வனிதா, திருமதி. செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1914281585786101985

Facebook: https://www.facebook.com/share/p/14vvrYG3Gog/

Instagram: https://www.instagram.com/p/DItQPiZIofM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post