மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடியாத்தம் தொகுதியில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

24 March 2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடியாத்தம் தொகுதியில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

காஞ்சி மண்டலம், குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டில் கட்சியின் தொகுதி அலுவலகத்தை, காஞ்சி மண்டலச் செயலாளர் திரு. அருள் அவர்கள் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து விரிவாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நகரச் செயலாளர் திரு. சார்லஸ் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேந்திரன், நிர்வாகிகள் திரு. தம்பா (எ) குமார், திரு. கமல் கார்த்திக், திரு. அஸ்லாம் பாஷா, திரு. பாஸ்கரன், திரு. கனகராஜ், திரு. வினோத் குமார், திரு. சலீம் பாஷா, திருமதி. முத்தமிழ், திருமதி. கலையரசு, திருமதி. C. அமுதா, திருமதி. S. தேன்மொழி, திருமதி. பியூலா, திரு. மணிகண்டன், திரு. C. செல்வராஜ் ஆகியோருடன் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஆம்பூர், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளை சார்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2036354771926523992?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1AdSWz1CWM/

Instagram: https://www.instagram.com/p/DWQoyROmmbo/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post