அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க சட்டத்தைக் கொண்டுவந்த, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

25 December 2025

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று கோவை மண்டலத்திற்குட்பட்ட, பவானி, கோபிச்செட்டிபாளையம், ஆனைமலை முக்கோண பகுதி, சத்தியமங்கலம், திருப்பூர், உடுமலைபேட்டை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கோவை மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ,

மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், மாவட்டச் செயலாளர்கள் திரு. G.C. சிவக்குமார், திரு. முஜிபுர் ரஹ்மான், திரு. பழனிவேல், திரு. குரு, திரு. கண்ணன்,
மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு.வாசுதேவன், திரு. கார்த்திக்ராஜ், திரு. N.K. பிரகாஷ்,
மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. நேக்கோபவல், நகரச் செயலாளர்கள் திரு. காளிமுத்து, நகர அமைப்பாளர் திரு. சிவகுமார், நகர வட்டச் செயலாளர் திரு. கமல் காமராஜ், மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் திரு. V.R. பழனிச்சாமி, மற்றும் ராஜா முகமது ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்...

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2004214833622011907

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid02YpaNNrLjK6DDY79FPYcQ8LbxRtpKhjB2dPTFMA52maeAz2pFRV6EA2QCyqygDcTVl

Instagram: https://www.instagram.com/p/DSsRQM3Cb1v/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post