நம்மவரை சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன்

11 June 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.D.ரவிக்குமார் அவர்களும், தலைவர் நம்மவரின் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

அத்துடன் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் ஆதரித்து பரப்புரை செய்தமைக்கு, நம்மவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அவர்களுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் திரு.பாலசிங்கம், திரு. குணவழகன், திரு. அப்துர் ரகுமான், திரு. வீர.பொன்னி வளவன், திரு. எழில் இமையன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd), பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#VCK

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1800382810903183578

Facebook: https://www.facebook.com/share/p/5Dg6QCbKPwX1dwve/

Instagram: https://www.instagram.com/p/C8D9tS9pUYy/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post