வேலூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம், கண் சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக,
வேலூர் மநீம மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் திரு. S.ஸ்டாலின் செல்வராஜ் அவர்களின் தலைமையில்,
காஞ்சி மண்டலச் செயலாளர் திரு. இரா. அருள் அவர்களின் முன்னிலையில்,
உறுப்பினர் சேர்க்கை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் CMC கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா I.P.S., (ஓய்வு) அவர்களும்,
உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்களும் துவக்கி வைத்து,
மய்யக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, கண் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் மண்டல அமைப்பாளர் திரு. D.K.ஏசு, திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு. பிரகாஷ் சந்திரா, மாவட்டச் செயலாளர்கள் திரு. S.கிருஷ்ணமூர்த்தி, திரு. விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. இராஜேந்திரன், திரு. G.சங்கர், திரு. M.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் திரு. J.ராஜா, திரு. மணி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. ஆதிபாஷா, திரு. T.அண்ணாமலை, திரு. நந்தகோபால், ஒன்றியச் செயலாளர் திரு. எழிலரசன், நகரச் செயலாளர்கள் திரு. V.மகேஷ், திரு. கார்த்திகேயன், திரு. கார்த்திக், திரு. சார்லஸ், திரு. குமார், திரு. ரமேஷ், திரு. இக்பால், கிளைச் செயலாளர்கள் திரு. முரளி, திரு. சௌந்தராஜன், திரு. சரவணன், திரு. மணிகண்டன், திருமதி. பவானி, திருமதி. பிரியா, திரு. வெங்கடேசன், திரு. பாஸ்கரன், திரு. ரகு, திரு. கிருபாரவி, திரு. தமிம், திரு. முனிநாதன், திரு. சமியுல்லா, முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு. பாஸ்கர் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், கண் மருத்துமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2001984108864647236?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1AiywAp8TC/
Instagram: https://www.instagram.com/p/DScbBQ4iUQo/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==