தலைவர் முன்னிலையில் சென்னை மீனவர்கள் கட்சியில் இணையும் நிகழ்வு

10 மார்ச், 2023

இன்று நமது கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் அவர்கள் முன்னிலையில், சென்னை மாவட்ட மீனவர்கள் 200 பேர், திரு. பிரதீப் குமார் தலைமையில் கட்சியில் இணைந்தனர். 

அத்துடன் வடசென்னை மாவட்ட பாரதீய ஜனதா மாவட்ட மீனவரணி செயலாளர் திரு. லோகேஷ் தலைமையில் பிஜேபி தொண்டர்களும் தலைவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். 

கூட்டத்தினர் முன்னிலையில், தலைவர் நம்மவர், மீனவர் இன்னல் களைய கட்சி பாடுபடும், கட்சியில் மீனவர் அணி துவங்கப்படும் என்று தெரிவித்தார். 

துவக்கத்தில் கட்சி துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா I.P.S., (ஓய்வு), அவர்கள் வரவேற்று பேசினார். விழாவில் கட்சி பொது செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A.B.L., அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்




சமீபத்திய காணொளி







Share this post