மநீம தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் சார்பாக "நாமே விதை, நாமே விடை".

11 ஜூன், 2023


மக்கள் நீதி மய்யம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் சார்பாக "நாமே விதை, நாமே விடை" என்ற தலைப்பில் 11.06.2023 அன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகப்பன் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று, மக்களை நேரடியக சந்தித்து, காய்கறி விதைகளை கொடுத்து உறுப்பினர்களாக்கி, மக்களை அரசியலுக்கு அழைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.

மாநில செயலாளர்கள் திரு.சிவ இளங்கோ (கட்டமைப்பு), திரு.செந்தில் ஆறுமுகம் (தலைமை அலுவலகம்), திரு.கிருபாகரன் (சமூக ஊடகம்), மாநில இணை ஒருங்கிணைப்பாளர் (நற்பணி) திரு.செல்லப்பாண்டி, மண்டல செயலாளர் திரு.அழகர், முன்னாள் மாநில இணைச்செயலாளர் (கட்டமைப்பு) திரு.ஆ.ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையில் மய்ய நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியை மதுரை மண்டல சமூக ஊடக அமைப்பாளர் திரு.ராஜா அவர்கள், மய்ய நிர்வாகிகளை பெரும்திரளாக திரட்டி, எழுச்சியுடன் ஏற்பாடு செய்திருந்தார்.

கோவை மண்டல அமைப்பாளர் (ஊடகம்) திருமதி.ரம்யா, மதுரை மண்டல அமைப்பாளர் (ஊடகம்) திரு.முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஊடக நிர்வாகிகள் திரு.மூர்த்தி சிவா, திரு.சுபாஷ் சந்திர போஸ், திரு.லஷ்மண், திரு.கமலநாதன், திரு.பிரான்சிஸ், திரு.யுவராஜ், திரு.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் திரு.V.B.மணி, திரு.R.ஆயூப்கான், திரு.K.கதிரேசன், திரு.G.சிவராஜா மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணைச்செயலாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், பொருளாளர்கள், நகர செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், நகர அமைப்பாளர்கள்,வட்ட அமைப்பாளர்கள், கிளை அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1668143680438538241?t=RAUKZHQMBZGllMAoaQQGgQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0VZYmvaB1ucB4JjJmbx4TgvVG7dBaCwsAU7dwsHReihSt8kda3zqRZECGaVC519Fl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CtYVwoWIe-l/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post