நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, சென்னை - தி.நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் போராடிவரும் மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்களை, நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்ததுடன்,
நம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான இந்த நீதிப்போராட்டத்தில் பங்கெடுக்க, மக்கள் பிரதிநிதிகளை விடவும் மேலான மிகுந்த துணிச்சலையும் தலைமைப் பண்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யமும், நமது தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களும் , மாணவர்களின் மற்றும் இளைஞர்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் முதன்மைப் போர்வீரர்களாக எப்போதும் துணை நிற்போம்.
கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுதல் மற்றும் போராட்டம் நடத்துவது என்பது நமது அடிப்படை உரிமையாகும்; அதை நாம் பொறுப்புணர்வோடு பயன்படுத்த வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து விதமான சட்ட உதவிகளையும், ஆதரவையும் வழங்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என மாநில செயலாளர் திரு. S.B. அர்ஜுனர் அவர்கள் @sbarjun7, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிவரும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
@Cockroachisback
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CJP
#CJPProtest
#NEET
#NEETProtest
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2080224854704640067?s=20
Facebook: https://www.facebook.com/share/v/18FHMAkud5/
Instagram: https://www.instagram.com/reel/DbIWi3UKKej/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==