பேரன்புமிக்க நம்மவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

7 நவம்பர், 2024

பேரன்புமிக்க நம்மவரின்
பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன், மேளதாளங்கள் முழங்க களைகட்டியது பிறந்த நாள் கொண்டாட்டம். தொடர் மழையையும் பொருட்படுத்தாது குவிந்த தொண்டர்களின் கரகோஷத்துக்கு இடையே கேக் வெட்டிக் கொண்டாடினர் கட்சியினர். மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரைகளுக்குப் பின்னர், ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை உண்டாக்கியது. அதேபோல, நம்மவரின் பாதையைப் பின்பற்றி 70-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் செய்தனர். மேலும், ரத்த தானமும் வழங்கப்பட்டது. நிறைவாக, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளும், உணவும் வழங்கி மகிழ்ந்தனர் மக்கள் நீதி மய்யத்தினர்.

@ikamalhaasan
 

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1854706352557613209

Facebook: https://www.facebook.com/share/v/19P3nb4Jfp/

Instagram: https://www.instagram.com/reel/DCGAKMXK6qI/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post