தலைமை நிலையத்தில் சுதந்திர தின விழா!
ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தன்று (15-08-2026, சனிக்கிழமை) காலை 09:30 மணியளவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையத்தில் (ஆழ்வார்பேட்டை) சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. துணைத்தலைவர் திரு. A.G.மெளரியா I.P.S., (Rtd) அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். சுதந்திர தின விழாவில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், சுதந்திரதினத்தன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! நாளை நமதே!
செந்தில் ஆறுமுகம் ,
தலைமை நிலையச் செயலாளர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2087870634340602202
Facebook: https://www.facebook.com/share/p/1Hvaw4jsj7/
Instagram: https://www.instagram.com/p/Db-rOOHqPid/?igsh=enZzeHVuaHF0cGNp